Wednesday, September 25, 2013

ஒடுக்கபட்டவர்களிடமும் ஒடுக்கபட்டவள் பெண்

சில ஆண்டுகளுக்கு முன்னர் தினமணி கதிர் இதழில்
புதுவை பல்கலை கழக நாடகத்துறை பேராசிரியை
ஒருவரின் நேர்காணலை வாசிக்கின்ற வாய்ப்பு
கிடைத்தது.


அவருடைய நேர்காணல் பெண்ணியம் சார்ந்த என்
பார்வைகளை கூர்மை படுத்த உதவியது.


அவர் சொல்கிறார் இந்த சமூகத்தில் கடை கோடி
பிரிவில் (ஜாதி ரீதியாக ,மற்றும் பொருளாதார ரீதியாக)
இருக்கும் ஆண் மகன் கூட தன மனைவியை
அடிமை படுத்தியே வைத்திருக்கிறான்.

இதற்கு அவர் இல்லக்கியத்தில் இருந்து உதாரணம்
தருகிறார்

அறிஞர் அண்ணா அவர்கள்,உணவு விடுதி
பணியாளர் பற்றி எழுதிய சிறுகதையில்
இந்த சமூக அநீதியை பதிவு செய்கிறார்.


அந்த சர்வர் தன் வாடிக்கையாளர் சிலரால்
அதிகாரம் செய்யபடுகிறார்.

அதன் எதிர்வினை மனைவியையே தாக்குகிறது.


மேலும் அந்த பேராசிரியை தன் எழுதிய நவீன நாடகம்
ஒன்றில் வரும் பாடலில் இந்திய பெண்மையின்
அடையாளம் கூறித்து பின்வருமாறு பதிவு செய்கிறார்

ஐந்து பேர் கற்பழித்த போது
பத்மினியாய் துடித்தது
தீயிட்டு கொளுத்திய போது
ரூப்கன்வராய் எரிந்தது


மேலும் இது குறித்த தொடர் சிந்தனையில்
இந்த சமூகத்தில் யார் நல்லவர்கள் ஆணா?
பெண்ணா என்பதல்ல கேள்வி
யார் யாரை ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதே கேள்வி
உதரணத்திற்கு ஒரு பெண் கெட்டவள் ஆக இருப்பதாக
கொண்டாலும் அவள் தன் மகளுக்கு மாப்பிள்ளையிடம்
இருந்து வரதட்சனை கேட்கமுடியுமா?

ஆண் மகனை உயர்த்தி பெண்ணை தாழ்த்தும்
சிந்தனைகளும்,நடைமுறைகளுமே ஆணாதிக்கம்.

அதுவே பெண் இனத்திற்கு முட்டுக்கட்டை
இந்த முட்டுக்கட்டைகளை உருவாகியதும் ஆண் வர்க்கமே.

இந்த புரிதலும் போராட்ட முன் எடுப்புமே
பெண் விடுதலையை பெற்றுத்தரும்.

படைபாளிகள் இயக்கம் சார்ந்து இயங்கலாமா?

படைபாளிகள் இயக்கம் சார்ந்து இயங்கலாமா?
என்ற விவாதம் நிகழ்ந்து கொண்டே வருகிறது.
இது குறித்து என் பார்வையை பதிவு செய்வதே
இந்த சிறு கட்டுரையின் நோக்கம்.


படைபாளிகள் தனித்தே இயங்க வேண்டும் என்பது
எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் கருத்து.


சுந்தர ராமசாமியின் மேற்கண்ட கருத்தை மறுக்கும்
ச.தமிழ்செல்வன் எந்த இயக்கத்தை
சாராமல் ஒரு படைப்பாளி இயங்கினாலும்
நகராட்சி , மாநகராட்சி போன்ற அரசமைப்பின்
கீழ் தானே வாழ்ந்து ஆக வேண்டும் என்கிறார்.


கவிஞர் மு.மேத்தா ஒரு நேர்காணலில்
ஒரு கவிஞன் ஒரு சமூக இயக்கத்தோடு தன்னை
ஒட்டி வைத்து கொள்ளலாம்.ஆனால் கட்டி வைத்து
கொள்ள கூடாது
என்கிறார்.

கவிஞரின் கருத்தும் ஏறக்குறைய சுந்தர ராமசாமியின்
கருத்தையே ஒத்து இருக்கிறது.


ஒரு படைப்பாளி குறிப்பிட இயக்கத்தின் கருத்துக்களால்
கவரப்பட்டு தன் படைப்புகளில் அவற்றை
பிரதி பலிப்பதோ மேற்கோள் காட்டுவதோ
தவறில்லை.

ஆனால் ஒரு இயக்கத்தின் முழுநேர பணியாளராக
மாறினால் தனித்தன்மையை இழக்க நேரிடும்.

ஒருவேளை விதிவிலக்காக ஒரு இயக்கத்தின்
முக்கிய பொறுப்பில் இருக்கும் போதே சுயமான
கருத்தையும் பேணி வரும் உரிமை இருக்குமானால்


அப்படி பணியாற்றுவதில் சிக்கலில்லை.

இந்த கூற்றுக்கு நடைமுறை உதாரணமாக
இருப்பவர் திரு.ரவிக்குமார் ஆவார்.

இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய
பொறுப்பில் இருப்பவர்.
இவருக்கும் கட்சி தலைவர் திரு.தொல்.திருமாவளவனுக்கும்
லட்சியம் ஒன்றே
என்றாலும் சிற்சில விசயங்களில் அதை அடையும்
வழிமுறைகளில் கருத்து வேறுபாடு உண்டு.


இந்த செய்தியை ஒரு நேர்காணலில் திரு .ரவிக்குமாரே
பதிவு செய்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட சிந்தனை சுதந்திரம் வி.சி. கட்சியில்
இருப்பது ஒரு தலித் விடுதலை இயக்கம் என்ற
வகையில் மிக மிக பொருத்தம் உடையதே.

Monday, September 23, 2013

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்

சூரியனை காட்டி

இவன் அன்னையால்

சோறு ஊட்டப்பட்டவன்

மறைவாய் இருப்பதால்

இறை போன்றவன்

திருந்தாது சிங்கள இனவெறி

திருந்திட செய்யும் இவனின் தமிழ் நெறி

Sunday, September 22, 2013

Thursday, August 29, 2013முகவரிகள்


மகாகவி சுப்ரமணிய பாரதி
நத்தையாக கூட்டுக்குள்
ஒடுங்கிய அடிமை இந்தியருக்குள்
அடங்க மறுத்து
பறவையாகி சிறகை
விரித்தவன்


புரட்சி கவிஞர் பாரதிதாசன்
அம்பிகளை அடையாளம் காட்டி
தமிழ் தம்பிகளை தன்மானம் கொள்ளச்செய்த
தமிழ் தும்பி


கவிஞர் கண்ணதாசன்
இவன் முன்னே
கோப்பையில் மது வழிகிறது

இவன் இதயத்திலோ
தமிழ் பொங்கி வழிகிறது


உவமை கவிஞர் சுரதா
புதிது புதிதான எண்ண மலர்களில்

கவிதை தேன் அருந்திய

எண்ணத்துப்பூச்சி


கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்

சொற்களை செதுக்கி

மன உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும்

எழுதுகோல் சிற்பி