மெல்லிசை மன்னர் எம் .எஸ் .வி யின் இசை வண்ணத்தில்
புதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தாவின் கவிதை நயத்தில்
“இசைத்தேன் இசைத்தேன்” தனி இசை தொகுப்பில் இடம்பெற்ற பாடல்
பாடியவர்கள் : எஸ் .பி .பி
& சித்ரா
ஆண் : உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்
உன் காதலின் தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்
பெண்: உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்
உன் காதலின் தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்
ஆண் : அங்கம் எங்கும் … ஆசை முழங்கும் அரசாங்கம்
பெண்: அங்கம் எங்கும் … ஆசை முழங்கும் அரசாங்கம்
ஆண் : வெள்ளி நிலா செல்லும் உலா
வெள்ளி நிலா செல்லும் உலா
உன் விரல்களின் மோதிரம் அன்பே
பெண்: பூவணியும் தாவணியும்
பூவணியும் தாவணியும்
உன் பூமியில் ஊர்வலம் இங்கே
ஆண் : அங்கம் எங்கும் ஆசை முழங்கும்
அரசாங்கம்
பெண்: அங்கம் எங்கும் ஆசை முழங்கும்
அரசாங்கம்
ஆண் : உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்
பெண்: உன் காதலின் தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்
ஆண் : புத்தம்புது
முத்துரதம்
புத்தம்புது முத்துரதம்
உன் புன்னகை வீதியில் ஓடும்
பெண்: சொத்து சுகம்
அத்தனையும்
சொத்து சுகம் அத்தனையும்
உன் பத்து விரல்களை தேடும்
ஆண் : அங்கம் எங்கும் ஆசை முழங்கும் அரசாங்கம்
பெண்: அங்கம் எங்கும் ஆசை முழங்கும் அரசாங்கம்
ஆண் : துள்ளி வரும்
பிள்ளை தமிழ்
துள்ளி வரும் பிள்ளை தமிழ்
உன் தோள்களில் பைங்கிளி போல
பெண்: உள்ளம் எனும்
தாமரை பூ
உள்ளம் எனும்
தாமரை பூ
உன் நியாபக அலைகளின் மேலே
ஆண் : அங்கம் எங்கும் ஆசை முழங்கும் அரசாங்கம்
பெண்: அங்கம் எங்கும் ஆசை முழங்கும் அரசாங்கம்
ஆண் & பெண் :
உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை
தேடுகிறேன்
ஆண் & பெண்: உன் காதலின் தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்
பாடலை கேட்பதற்கு : https://www.saavn.com/s/song/tamil/Isaithaen-Isaithaen/Un-Kangalin-Velichathil/Ew89BDxaXFY