Thursday, January 30, 2020

மதிப்பிழந்த பணம்




கருப்பு பணத்தை அழித்தொழிக்க களமிறங்கிய அண்ணாச்சி

அம்பானிகளும் அதானிகளும் குவிச்சிருக்கும் பணத்தின் கணக்கு என்னாச்சு

பணக்காரனுக பணம் மட்டும் பல மடங்கா பெருகுது

நடுத்தர வர்க்கத்தினரின் பணம் மட்டும் டெபிட் கார்டு வழியே கரையுது

 

தங்கு தடை ஏதுமின்றி பணக்காரனுக கார் வலம் தொடருது

ஏழைங்க வீட்டு  அடுப்பில் இப்ப பூனை படுத்து தூங்குது

எல்லையோரம் கள்ள பணம் கலந்திருக்கு என்று நீங்க சொன்னீங்க

எல்லா விதமான தொல்லைகளையும் எங்களைதான்  சுமக்க வச்சீங்க

 

கைஇருப்பையும்  புடுங்கிகிட்ட புண்ணியவானே

இடுப்பு துணியையும் உருவ திட்டமிடும் கண்ணியவானே

சில்லறை தட்டு பாட்டால் சிறு வணிகர்களின்  தலையில் இடி இறங்குது

ரிலையன்ஸ் பிரெஷிம்  நீல்கிரிசம் வெற்றி கொடியை நாட்டுது

 

பணக்கார வர்க்கத்தை மட்டும் அரவணைக்கும் பாரத தாயே

எங்கள் நெஞ்சில் பற்றி எரிவது நீ வைத்த தீயே

பண முதலைகளுக்கு கடன் தந்தே வங்கிகள் எல்லாம் சீரழியுது

வங்கி  வாசல் வரிசையில் நின்னே எங்களின் பாதி பொழுது வீணாய் போகுது 



நாங்க தந்த  பழைய  நோட்டு வங்கிகளின் கணக்கிலே
அரசாங்கம் வெளியிட்ட புது நோட்டின் பெரும்பகுதி கருப்பு பணமுதலைகளின் பையிலே