Thursday, August 29, 2013

அம்மா சொன்ன கவிதைகள்




என் தாயார் தற்போது உயிருடன் இல்லை

என்றாலும் அவர் பேசிய பேசசுக்கள்


என் நெஞ்சில் என்றும் வாழ்ந்துகொண்டே

இருக்கும்


ஒரு சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன் .

வாசகர்களுக்கு அவரவர் அம்மாவின் நினைவுகள்

அலைமோதும் என்று நம்புகிறேன்


என் தாயாரின் வாயிலிருந்து வரும் சொற்கள்

பல நேரங்களில் கவித்துவமாக இருக்கும்.


தண்ணீர் பஞ்சம் பற்றி அலுப்போடு கூறியது


தண்ணீர் பஞ்சத்தில்

பெரம்பலூர் அக்கானா

மணப்பாறை தங்கச்சி



என் தாத்தா (அம்மாவின் அப்பா )

சொத்துக்கள் அனைத்தும் ஆண் பிள்ளைக்கே (என் மாமா) உயில் எழுதி வைப்பேன்

என்றதும் மிகப்பெரிய சண்டையும் வாக்குவாதமும்

நடந்தது.

பின்பு சிறிது நேரத்தில் என் சித்தியும் (அம்மாவின்
உடன் பிறந்த தங்கை )அம்மாவும் சமையல்
அறையில் ஏதோ சிரித்து பேசி கொண்டிருந்ததை
காதில் கேட்டுவிட்டு


என்ன பாப்பா ஒரே சிரிப்பா இருக்கு?
என்று கேட்டதற்கு கோபமும் கேலியும் கலந்த
கவித்துவ வார்த்தைகளில் சொன்ன பதில்


எங்க சிரிப்பை யாருக்கும்

நீங்க

உயில் எழுதி வைக்க முடியாது



ஒரு தீபாவளி மதியம் திருச்சியில் இருந்து அருகில்

உள்ள என் அப்பாவின் ஊரான முததரசநல்லூர்

கிராமத்திற்கு சென்றே ஆக வேண்டும்

என்று சொன்னதால் மிகவும் கூட்டமான


"பேருந்தில் என்தாயார் மாட்டிக்கொள்ள நேர்ந்தது
"
பேருந்தை சுற்றி சுற்றி வந்து என் அம்மாச்சி
(அம்மாவின் அம்மா ) பட்ட தாய்மையின் தவிப்பை
கோழியுடன் ஒப்பிட்டு பேசுவார் என் தாய்


கவிஞர் கண்ணதாசன் பொல்லாதவன் திரைப்படத்திற்கு

எழுதிய "நான் பொல்லாதவன் " எனத்தொடங்கும்


பாடலில் இடம் பெற்ற

"வானத்தில் வல்லுரு வந்தாலே கோழிக்கு

வீரத்தை கண்டேனடி"

என்ற வரிகளின் உவமைநயத்திற்கு சற்றும்
குறைவுபடாத வரிகள் என் தாயாரின் வரிகள்

என்பதை பெருமை பொங்க கூறிக்கொள்ள விழைகிறேன்.

என்ன ஒரு வேறுபாடு கண்ணதாசனுக்கு எழுதும்

வாய்ப்பு கிடைத்தது.

என் தாயாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை


அந்த வார்த்தைகள் பின்வருமாறு:




பேருந்தை சுற்றி சுற்றி

எங்க அம்மா வந்தது பார்க்க

கோழி குஞ்சு உள்ள

மாட்டிக்கும் பொழுது

தாய் கோழி தவிப்போட பஞ்சாரத

சுற்றி சுற்றி

வருமே அது மாதிரி


இருந்துச்சு

No comments:

Post a Comment