Monday, October 28, 2013

வானத்திலே திருவிழா

ஒவ்வொரு மனிதனும் தன் குழந்தை பருவத்தை
மறந்து விடமுடியாது

கவலைகள் ஏதுமின்றி வானம்பாடிகளை போலே
நாம் பறந்து திரிந்த காலங்கள் அவை.

வயதுகள் ஏற ஏற பொறுப்புகளும்,பொருளாதார
சுமைகளும் நம்மை அழுத்துகின்றன.

மீண்டும் அந்த ஆரம்பபள்ளி நாட்களுக்கு ...

நாம் ஊஞ்சல் ஆடிய பழைய தொட்டிலுக்கு ...

ஒரு மீள் பயணம்.

அங்கே நம் மனகுகை ஓவியங்களில்தான்

எத்தனை எத்தனை வண்ண வண்ண

ஓவியங்கள்

கால கரையான் அரிககாமலும்,எண்ண தூசிகள்
படியாமலும் ஒரு சிலரால்தான் அந்த ஓவியங்களை

பாதுகாக்க முடிகிறது.


அந்த வகையிலே இந்த குழந்தை இலக்கிய கவிதை

என் ஆரம்பபள்ளி நாட்களில் நான் தமிழ் பாட

நூலில் படித்தது.

சுவைத்தது.

இந்த கவிதையை எழுதியவர் கவிஞர் பொன்.செல்வ கணபதி.


கவிஞர் மு.மேத்தா உடன் பணியாற்றிய பேராசிரிய
நண்பர்.


சென்னை தலை நகரம்
மட்டும் அல்ல

சிலை நகரமும் கூட

இங்கேதான் தலைவர்கள்

சிலைகளில் கூட பேசிக்கொண்டு இருக்கிறார்கள்


உழைப்பாளிகள்

உழைத்து கொண்டு இருக்கிறார்கள்

என்ற அற்புதமான கவிதை வரிகளை படைத்த
முற்போக்கு கவிஞர்.

அந்த கவிதை இதோ...

வானத்திலே திருவிழா

வழக்கமான ஒருவிழா

இடிஇடிக்கும் மேளங்கள்

இறங்கி வரும் தாளங்கள்


மின்னல் ஒரு நாட்டியம்

மேடை வான மண்டபம்

தூறல் ஒரு தோரணம்

துய மழை காரணம்


எட்டு திசை காற்றிலே

ஏக வெள்ளம் ஆற்றிலே

தெருவெல்லாம் வெள்ளமே

திண்ணை ஓரம் செல்லுமே


தவளை பாட்டு பாடுமே

தண்ணீரிலே ஆடுமே

1 comment:

  1. பார் முழுதும் வீட்டிலே,பறவை கூட கூட்டிலை. கடைசி வரி இதுதான்

    ReplyDelete