மக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த |
சட்டமன்ற தேர்தல்
அது. |
|
நான்கு முனை
போட்டியில் தமிழகமே பரபரப்பாகி இருந்தது. |
|
தலைவர் கலைஞர்
தலைமையில் தி .மு .க ஓர் அணியாகவும் , |
|
அ.தி.மு.க. - ஜெயலலிதா தலைமையில் ஓர் அணியாகவும் , |
|
ஜானகி தலைமையில்
ஓர் அணியாகவும் , |
|
மூப்பனார் தலைமையில்
காங்கிரஸ் ஓர் அணியாகவும் , போட்டி இட்டன. |
|
|
ஜானகி அணியில்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அப்பொழுதுதான் |
|
தொடங்கி இருந்த
தமிழக முன்னேற்ற முன்னணி இணைந்து |
|
போட்டி இட்டது. |
|
தி. மு. க. தலைவர்
கலைஞர் அவர்கள் நடிகர் திலகத்தின் |
|
புதிய கட்சியை
பெயரிலேயே இரண்டு முன்னேற்றமா என்று |
|
தனக்கே உரிய
பாணியில் கட்சியின் தொடக்க விழாவில் |
பாராட்டி
இருந்தார். |
|
நடிகர் திலகம்தான்
தமிழில் நாட்டிலேயே அதிக ஓட்டு |
|
வித்யாசத்தில்
திருவையாறு தொகுதியில் வெற்றி பெறுவார் |
|
என்று ஜூனியர் விகடன் போன்ற அரசியல் பத்திரிகைகள் |
|
செய்தி வெளியிட்டு
கொண்டிருந்தன. |
|
தேர்தலும் வந்தது. |
|
முடிவுகள் வெளியாக
தொடங்கின. |
|
|
வானொலியில்
செய்திகளை என் ஒட்டு மொத்த குடும்பத்தாரும் |
|
கேட்டு
கொண்டிருதனர் |
|
பெருவாரியான இடங்களில் தி. மு. க.
முன்னிலையில் இருப்பதாக |
|
செய்திகள்
வந்தவண்ணம் இருந்தன. |
|
|
நடிகர் திலகம் தன்
தொகுதியில் பின் தங்குகிறார் |
|
என்று செய்திகள்
வெளியாகின. |
|
இந்த செய்தியை
சொல்லி விட்டு , |
|
|
ஆண்டவன் கட்டளை
படத்தில் இருந்து ஒரு பாடல் தற்பொழுது |
|
கேட்கலாம் என்றார்
செய்தி வாசிப்பாளர். |
|
அமைதியான நதியினிலே
ஓடம் |
|
என்ற பாடல்
ஒலிபரப்பாக தொடங்கியது |
கேட்டு கொண்டிருந்த
எங்களுக்கு ஒரே அதிர்ச்சி |
|
இது தற்செயலா ?
அல்லது திட்டமிட செயலா? |
எங்களுக்கு
புரியவில்லை |
இந்த பாடல்
முடிந்ததும் அடுத்த அதிர்ச்சி |
|
|
ஜானகி எம்.ஜி.ஆர்
-ம் தோல்வி அடைந்தார் என்பதுதான் அந்த அதிர்ச்சி |
|
இதுக்கும் எதாவது
பாட்டு போட்டுட போறாங்க ! என்று |
|
|
என் அண்ணன் சொல்லி
வாய் மூடவில்லை |
|
|
பொன் எழில் பூத்தது
புது வானில் (தி .மு .க வின் உதய சூரியன் |
சின்னத்தின் வெற்றி
முகம்) |
வெண்பனி சூடும்
நிலவே நில் |
என் வன தோட்டத்து
வண்ண பறவை |
(எம்.ஜி.ஆர்
வீடு ராமாவரம் தோட்டம் |
மேலும் அ.தி.மு.க
ஜானகி அணியின் |
சின்னம் இரட்டை
புறா) |
|
சென்றது எங்கே சொல்
சொல் |
என்ற பாடல்
ஒலிபரப்பாக தொடங்கியது |
|
நடிகர்
திலகத்திற்கு கவிஞர் கண்ணதாசனின் பாடல் |
|
பொருந்தி போன அதே
வேளையில் |
|
ஜானகி எம்
.ஜி.ஆருக்கு கண்ணதாசனின் அண்ணன் மகன் |
|
பஞ்சு
அருணாச்சலத்தின் பாடல் பொருந்தி போனது. |
|
|
நடிகர் திலகம் உலக
பெரும் நடிகர். |
|
அவரை தமிழ் மக்கள்
தலை சிறந்த நடிகர் என்று |
|
கொண்டாடினார்களே
தவிர அரசியல் தலைவர் |
|
என்ற
கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை |
|
என்றெல்லாம் - |
|
அரசியலை ஆய்வு
செய்வோர் கூறினாலும் |
|
என் போன்ற அவரது
தீவிர ரசிகர்களுக்கு |
|
பெரும் வேதனையே . |
|
ஒரு தகுதியும்
இல்லாத எத்தனையோ பேர் தேர்தலில் |
|
வெற்றி பெரும்
வேளையில் கலை தாயின் தவ புதல்வன் |
|
கலை வானின் முழு
நிலவு எங்கள் நடிகர் திலகத்திற்கு |
|
திருவையாறு
தொகுதியில் இரண்டாம் இடம் கூட |
|
இல்லாமல் நான்காம்
இடத்திற்கு தள்ளிய கொடுமையை |
|
என்னென்று
உரைப்பது? |
|
இவை எல்லாம் ஒரு
புறம் இருக்க |
|
நடிகர் திலகம் தன்
அரசியல் தோல்வி பற்றி கூறும்போது , |
|
அரசியலில் நான்
தோற்கவில்லை |
(அதாவது மக்கள்
காரணமில்லை) |
|
வஞ்சிக்க பட்டேன் |
(எதிரிகளின்
சூழ்ச்சி ) என்றார். |
|
காலங்கள்
பறந்தோடிவிட்டன |
|
இப்பொழுதும் இந்த
இரண்டு பாடல்களையும் |
|
கேட்க
நேரும்போதெல்லாம் |
|
மனக்குகையில்
உறங்கும் என் நினைவுகள் மெல்ல கண்
விழிக்கும். |
No comments:
Post a Comment