Wednesday, May 23, 2018

எளிமையும் வெறுமையும்



 
மரபுக்கவிதையின் சில வேலிகளை தகர்த்துதான்  நாங்கள் புதுக்கவிதையை கொண்டு வர முடிந்தது.

என் மீது கூட ஒரு குற்றசாட்டை கூறுவார்கள் :

"மு.மேத்தா புதுக்கவிதையை எளிமை படுத்தியது மட்டுமல்லாமல் ,வெறுமைப்படுத்தியும் விட்டார் " என்று.

  • மேற்கண்ட கருத்துக்கள் இணைய தள(tamilonline) நேர்காணல் ஒன்றில் ,

கவிஞர் மு.மேத்தா அவர்கள் குறிப்பிட்டவை .

கவிஞர் மு .மேத்தா வை பற்றி இப்படி குறிப்பிட்டவர் கவிஞர் நா.காமராசன்

.ஆனால் இந்த வார்த்தைகளில், இந்த பொருளில் அவர் குறிப்பிடவில்லை .

"என் நண்பர் மேத்தா புதுக்கவிதையை எளிமை ஆக்கினார்

ஆனால் இவர்களோ வெறுமை ஆக்கிவிட்டார்கள். "

என்றே கூறினார் .

 இரண்டிற்கும் மலையளவு வேறுபாடு உண்டு என்பது மிக எளிதில் விளங்கும் . நா.காமராசனின் இந்த புதுக்கவிதையின் அன்றைய (எண்பதுகளின்) போக்கு குறித்த மதிப்பீட்டையும் மு .மேத்தாவின் நூல்கள் (திறந்த புத்தகம், இதய வாசல்) வாயிலாகவே நான் அறிந்தேன் .

 
காலத்தின் ஓட்டத்தில்  கவிஞர் மு.மேத்தா மறதியின் காரணமாக  அந்த வார்த்தைகளை மாற்றி கூறி இருக்க வேண்டும் . அல்லது அந்த இணையத்தள நண்பர்கள் கவனக்குறைவாக வேறு பொருள் வரும்படி தட்டச்சு செய்திருக்க வேண்டும் .

எனவே , கவிஞர் நா.காமராசன் , கவிஞர் .மு மேத்தா வை குற்றம் சாட்ட வில்லை .

புதுக்கவிதையை மேத்தா எளிமைப்படுத்தியதை குறை காணவில்லை .

 ஆனால் ஒரு சிலர் ஆர்வமிகுதியில் அதை வெறுமை ஆக்கி விட்டார்களே என்பதே நா .காமராசனின் ஆதங்கம் .

புதுக்கவிதை என்கின்ற இலக்கிய வடிவத்தை ஒரு கலை வடிவம் என்கிற சிறு கூட்டுக்குள் இருந்து அறிவாயுதமாக , சமூகத்தின் போர் கருவியாக சிறகடிக்க செய்ததில் மு.மேத்தாவின் பங்கு முக்கியமானது;.முதன்மையானது.


புரட்சி கவிஞர் பாரதி தாசனால் பொங்கி பிரவாகம் எடுத்த தமிழ் தேசீய சிந்தனைகளையும் உள்ளடக்கி , பாரதியின் உலகளாய்ந்த பார்வையையும் உள்விழுங்கி கொண்டு, மார்க்சீய தளத்தில் கால் பதித்து நின்றதே வானம்பாடிகளின் தனிச்சிறப்பு .


அத்தகைய வானம்பாடிகள் இயக்கத்தின் கவிஞர்களில் ஒருவரான மு .மேத்தா  கவிதையை,எளிமைப்படுத்தியதன் மூலமே மக்கள் மயமாக்கினார் .

 

எளிமையே கவிஞர் .மு.மேத்தாவின் வலிமை.

கவிதை உலகில் மு.மேத்தாவின் மகத்தான  வெற்றியின் ரகசியம்தான் என்ன?

கவிஞர் .பாலா குறிப்பிட்டதை போல ,

எந்த இலக்கண புலவனுக்கும் வேலை வைக்காத எளிமைதான்.

No comments:

Post a Comment