ஒரு தமிழ் பத்திரிக்கை நேர்காணலில்
,
இசை அமைப்பாளர் தேவா அவர்களிடம் உரையாடும்
போது
திரைப்படப்பாடலின்
அமைப்பு பற்றி பேச்சு வந்தது
.
அந்த காலத்துல கண்ணதாசன் பாட்டு எழுதும் போது
,
வாசமலர்
செண்டு
யார் வரவை கண்டு
வாடியது
இன்று
என்ற வரிகளை போன்று மிக சிறிய ,சிறப்பான வரிகளை எழுதினார்
அதே வேளையில்
,
மலர்ந்தும் மலராத
பாதி மலர் போல வளரும் விழிவண்ணமே
விடிந்தும் விடியாத
காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே.
என்ற பல்லவியை போன்று மிக நீண்ட வரிகளையும்
எழுதுகிற
கவிதை ஆற்றலும் அவர்கிட்ட இருந்தது .
இந்த காலத்துல அப்படி பட்ட பாடல்கள்
உண்டா ?
-இது நிருபரின் கேள்வி
கண்ணதாசன்
காலத்து பாடல்களோடு இந்த காலத்து பாடல்களை ஒப்பிட்டு
பேச நான் விருப்பவில்லை என்றார் தேவா .
என்னை பொறுத்தவரையில் இந்த விமர்சனத்தை ஒப்புக்கொள்ளும்
எண்ணமில்லை .
கண்ணதாசனின்
அடுத்த தலைமுறை கவிஞரான மு
.மேத்தா அவர்களின் பாடலில் இருந்தே
என் கருத்திற்கு வலுசேர்க்கும் எடுத்துக்காட்டை
பதிவு செய்ய முயல்கிறேன் .
"மங்கை
ஒரு கங்கை " என்ற திரைப்படம் .
இந்த படத்தில் இடம்பெற்ற காதல் (டூயட் ) பாடலான,
அழகிய நிலவிது அருகினில் உலவுது இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் இமைகளில் விரிந்தன பறந்திட சிறகுகள் எங்கங்கே?
என்ற பாடலின் பல்லவி, கண்ணதாசனின் பாடல் போன்றே மிக நீண்ட வரிகளை கொண்டிருக்கிறது
.
அதுமட்டுமல்ல.
இதுவரை திரைப்பாடலில்
கண்டிராத சொல்லாட்சிகளான
நிலவிது, உலவுது,
இங்கிங்கே, எங்கங்கே போன்ற
சொற்களை தன்னகத்தே
கொண்ட தனி சிறப்பு வாய்ந்தது.
No comments:
Post a Comment