Thursday, August 2, 2018

காதல் ஒரு கனவு



(நான் தமிழில் மொழிபெயர்த்த ஹிந்தி திரைப்படநடிகை மீனாகுமாரி அவர்களின் கவிதை)



காலம் என் மனம் கவர்ந்த விருப்பங்களை

தட்டிப் பறித்து கொண்டு எங்கோ சென்றுவிட்டது

ஒவ்வொரு கடும் துயரின் வருகைக்கும்

என் இதயம் கொந்தளிப்படைகிறது இப்பொழுது

ஒவ்வொரு

புதிய துயரத்திற்கும் என் ஆத்துமா

கண்ணீர் துளிகளாய் சிதறுகிறது.

உதடுகளில் நான் சூடும்

புன்னகை ஒப்பனையை 

கண்களில் இருந்து வழிந்தோடும்

கண்ணீர் கலைத்து விடுகிறது

வாழ்க்கை என்பதே துயரங்களால் உருவான

கதைகளின் தொகுப்பு

என் கதை முடிவை எட்டி பிடித்துள்ளது.

 
























No comments:

Post a Comment