Sunday, August 12, 2018

கலைஞர் மு .கருணாநிதி




மு.க .ஸ்டாலின் அவர்கள் முதல்முதலாக சென்னை மாநகராட்சி மேயராக   தேர்ந்து எடுக்க பட்ட போது எழுதியிருந்த உறுதிமொழி முன்வரைவில் (DRAFT) “மேயர் பதவி” என்றிருந்த சொல்லாட்சியை மாற்றி அது பதவி அல்ல பொறுப்பு என்று திருத்திய கலைஞரின் அரசியல் அறிவு நுட்பம்.






 

பொதுவாக அரசியல் களத்தில் எம்.ஜி .ஆர்-ஐ கலைஞர் வெற்றி கொள்ளவேயில்லை என்பது வேண்டும்மென்றெ ஏற்படுத்தப்பட்ட
பொய்த்தோற்றம். (உண்மையில் அரசியல் வெற்றி தோல்வி என்பது ஒரு இயக்கத்தின் கொள்கை சார்ந்த பயணத்தின் வெற்றி தோல்வியை வைத்தே அளக்கப்படவேண்டும். தனிப்பட்ட தலைவர்களின் தேர்தல் தோல்விகளை வைத்து அல்ல)


எம்.ஜி .ஆர் வென்ற 1977 சட்ட மன்ற தேர்தலில் இருந்து அவர்       மறைந்த  1987 வரை நடைபெற்ற மூன்று சட்டமன்ற தேர்தல்களில்
   அ .தி .மு .க ,    தி .மு .க வை வெற்றி கொண்டது எவ்வளவு      உண்மையோ அதே அளவு உண்மை , அந்த இடைப்பட்ட பத்தாண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் (1980 இல்) தி .மு .க வே வென்றது .
    அ .தி .மு .க வெறும் இரண்டு தொகுதிகளை மட்டுமே வென்றது .
1984 இல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் தி .மு .க வே பெருவாரியாக வென்றது.
 





No comments:

Post a Comment