Monday, October 29, 2018

வைரமுத்து - சில கடந்த கால பார்வைகள்


கவிஞர் நா . காமராசன் தன் கவிதை ஓன்றில்

"அன்னை தமிழே என் ஆவி கலந்தவளே

என்னை வளர்பவளே என்னுள் வளர்பவளே"

என்று எழுதி இருப்பார்.

அந்த கவிதை ,

தமிழ் மொழி மீது  தணியாத பற்று கொண்ட ஒரு தமிழனின் ,

உண்மையாக நெஞ்சம் வளர்த்த ஒரு கவிஞரின்,

இதழ்களில் இருந்து அல்லாமல் இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள்.

அதனால்தான் பருக்கை அளவு கூட செருக்கை அனுமதிக்காமல் அமைந்துள்ளது
.


ஆனால் வைரமுத்துவோ, இதுவரை தமிழ் எனக்கு சோறு போட்டது.

இனி தமிழுக்கு நான் சோறு போடுவேன் என்கிறார் கர்வத்துடன்.

தமிழ் தாய் என்ன பட்டினியாகவா இருக்கிறாள்?

அதுமட்டுமா ?  ஒரு பத்திரிகையின் நேர்காணலில்,

என் கவிதைக்கு நேர்ந்த நட்டத்தை நான் உணர்கிறேன்.

 

தன் இசைக்கு நேர்ந்த நட்டத்தை இசைஞானி இளையராஜா தான் உணரவேண்டும் என்கிறார் வைரமுத்து.

ஓரே நேரத்தில் தான் அல்லாத மற்ற கவிஞர்களையும்

இசைஞானி இளையராஜா  அல்லாத மற்ற இசை அமைபாளர்களையும் மட்டம் தட்டும் போக்கை வேறு எவரிடமும் காணமுடியாது.

 

இந்தியன் திரைபட விழாவில் , பேசும்போது பட்டி மன்ற விழாவில்

தன்னையும்  கவிஞர் வாலி யையும் விமர்சனம் செய்தால் நடப்பதே வேறு என்று மிரட்டிய செயல்.

இவரும் வாலி யும் பெண்களை பற்றி இழிவாக எழுதுவார்கள்.

இதன் எதிர் வினையாக எழுத்தாளர் பாமரனும் , பட்டி மன்ற பேச்சாளர்களும்  இந்த போக்கிற்கு எதிராக குரல் கொடுத்தால் இவர் மிரட்டுவார். இதென்ன நியாயம்?

 

திரைபட பாடல் அசிரியர் சிநேகன் தன் பேட்டிகளில்,

தான் வைரமுத்துவின் உதவியாளராய் இருந்ததையும், தனியாக பாடல் எழுத முற்பட்ட போது மிரட்ட பட்டத்தையும்  பலமுறை பதிவு செய்துள்ளார்.

 

ஜெயகாந்தன் அவர்கள் காலமான பின்பு , குமுதத்தில் வெளியாகிகொண்டிருந்த வைரமுத்துவின் சிறுகதைகள் குறித்து அவரின் பாராட்டுரை என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.

அடுத்த குமுதம் இதழில்,

 

"என் தந்தை கடைசி மூன்று மாத காலம் படுத்த படுக்கையாக இருந்தார்.

அவரால் பேசவோ எழுதவோ முடியாது.

இந்த நிலையில் வைரமுத்துவிற்கு எப்படி பாராட்டுரை வழங்கி இருப்பார்?

வைரமுத்துவிற்கு எதற்கு இந்த விளம்பர மோகம் ?"

என்று ஜெயகாந்தனின் மகள் கண்டனம் செய்திருந்தார்.

 

No comments:

Post a Comment