Saturday, December 28, 2019

ஈழ தமிழரையும் இஸ்லாமியரையும்





மோடியும் அமிட்சாவும் பிற நாடுகளில் இருந்து வந்த ஹிந்துக்கள் கிறிஸ்தவர் புத்த மற்றும் சீக்கிய இத்தனை மதத்திற்கு கருணை காட்டுவார்களாம் முஸ்லீம் மட்டும் கூடாது என்பார்களாம் இந்த முஸ்லீம் களை மட்டும் வெறுக்கும் போக்கு ஏன் ?

எங்கள் ஈழ தமிழரில் பெரும்பான்மை ஹிந்துக்கள் தானே அவர்கள் பல ஆண்டுகள் அகதி முகாம் இல்
பரிதவிக்கிறார்களே ?
அவர்கள் உங்கள் பார்வையில் ஹிந்து இல்லையா என்று நாம் கேட்டால்,
மாண்புமிகு அமைச்சர் அமிட்ஷா பதில் சொல்கிறார்
அங்கு மத ரீதியான துன்புறுத்தல் இல்லையாம் அவர்கள் விரட்டி அடிக்க படவில்லையாம் உரிமை கேட்டு சண்டை இட்டு வருகிறர்களாம் .அமைச்சர் சொல்கிறார்

ஐயோ கடவுளே இந்த கொடுமைகளை நான் எங்கு போய் என்னவென்று உரைப்பேன்?
விதியே விதியே என்ன செய்ய நினைத்தாய் தமிழ் சாதியை 
என்று பாரதியின் வார்த்தைகளில் அல்லவா எனக்கு கத்த தோன்றுகிறது


ஈழ தமிழன் எங்கே சண்டை இட்டான் அவன் சிங்களரோடு இணக்கமாய் தானே இருந்தான்

சிங்கள ஓன் ஆக்ட் என்று சட்டம் இயற்றி அவன் அல்லவோ எம்தமிழனை அடிமை செய்தான்

1983இல் கறுப்பு ஜூலையில் இனவெறி நெருப்பாட்டம் ஆடினான் எத்தனை தமிழர் அய்யா எத்தனை தமிழர் அய்யா 


தமிழ் ஈழத்தில் உள்ள திருகோணமலையில் உள்ள சிவன் ஆலயத்தின் சிவாச்சாரியார் உயிரோடு கொளுத்தப்பட்டார் அப்பொழுது பிரபாகரனுக்கு ஐயிந்து வயது 
அப்பொழுது இருந்து ஆயிரக்கணக்கான ஹிந்து ஆலயங்கள் தமிழ் ஈழ மண்னில் இடிக்கப்பட்டுள்ளன இவையெல்லாம் மத ரீதியான துன்புறுத்தல் இல்லையா பாகிஸ்தான் ஹிந்துக்களுக்கு ஒரு நியாயம் தமிழீழ ஹிந்துக்களுக்கு ஒரு நியாயமா?

Friday, December 27, 2019

பிறை நிலவும் பிள்ளை தமிழும்




என்னோடு பணியாற்றும்
ஒரு இஸ்லாமிய சகோதரன் கேட்கிறான்
நாங்கள் யாருக்கு என்ன தீங்கிழைத்தோம்?

 எதன் பொருட்டு வெறுக்கப்படுகிறோம்

எதனால் ஒதுக்க படுகிறோம் ?

என்ன பதிலை நான் சொல்வது


உயர்த்தி பிடிப்போம் வள்ளலாரின்
அன்பு நெறியை
மாயட்டும் மறையட்டும்
மதவெறி
இந்த மண்ணை விட்டு 
சிலரின் மனதை விட்டு 

அன்பை வைத்து
நீ ஒரு தொட்டில் கட்டு
மனிதகுலம் நித்திரை கொள்ளட்டும்
அமைதி பெற்று
உயிர் போகும் பொழுது
மதம் பார்ப்பவர் உண்டோ
என் மதத்தவர்தான் மருத்துவராய்
வர வேண்டும் என்று அடம் பிடிப்பவர் உண்டா

இசை ஞானி இளைய ராஜா தன்னை
 ஈன்றெடுத்த அன்னை 
சின்னதாயீ அம்மை
தன் மகனின் நண்பன்
கவிஞர் முகமது மேத்தாவின்
நெற்றியிலே 
இட்டார் திரு நீறு

பிறை நிலவை போலல்லவா
அது எனக்கு காட்சி அளிக்கிறது
மத நல் இணக்கத்திற்கு
ஒடி வந்து சாட்சி அளிக்கிறது

உயர்த்தி பிடிப்போம் வள்ளலாரின்
அன்பு நெறியை
மாயட்டும் மறையட்டும்
மதவெறி
இந்த மண்ணை விட்டு 
சிலரின் மனதை விட்டு 



ஈழ தமிழரையும் இஸ்லாமியரையும்
திட்டமிட்டு புறக்கணிக்கும்
திமிர் போக்கை முறியடிப்போம் 

பிறை நிலவும் பிள்ளை தமிழும்
ஒன்றாக கைகோர்ப்போம்


உனக்கொரு கேள்வி




நியாமான போராட்டம் நடத்தினால்
வன்முறையாம்
பாபர் மசூதியை இடித்தது
என்ன மென்முறையா

உளற ஆரம்பித்து விட்ட
 உச்ச நட்சத்திரமே 
அரசியல் வானில்
நீ
ஒரு உதிர்ந்த நட்சத்திரம்

உன் சொகுசு வாழ்க்கைக்கு
எங்களின் தன்மானத்தை
அடகு வைக்காதே


Saturday, December 21, 2019

அறிமுகம்





நான் குளிர் ரத்த பிராணி 

அல்ல.

வெப்ப ரத்த பிராணி

 

ஓதிய மரம் என்று

எனக்கு

உவமானம் சொல்ல

பலர் இருந்தார்

ஒன்றுக்கும் உதவாதவன்

என்ற கருத்தில்

 

உவமானகளுக்குள் எல்லாம்

சிறைப்படாத உவமேயம் நான்

என்பதை யார் அறிவார்?





இந்த உலகத்தை நான்

கண்களால் மட்டுமே

பார்க்கவில்லை

இதயத்தால் பார்க்கிறேன்

ஒரு

இடமாறு தோற்ற பிழை

இருக்கத்தானே செய்யும் ?

 


 

Tuesday, December 17, 2019

தாஜ்மஹாலின் காதிலே ராமகாதை


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை
வியப்பில் ஆழ்த்திய கவிஞர் மு மேத்தா
          ***
தமிழ் மைந்தன் சரவணன்

ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்தஒரு படத்தின் தமிழ் வடிவம்தான் வேலைக்காரன் என்ற வெற்றி படம்.
இந்த திரைப்படத்தின் பாடல் பதிவுகளுக்கான இடங்களை தேர்வு செய்வதற்காக படத்தின் இயக்குனர் எஸ் பி முத்துராமன் அவர்களுடன் படத்தின் நாயகன் ரஜினிகாந்த்
சென்றபோது காதல் பாடலுக்கு தாஜ் மகாலில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த விஷயத்தை உடனடியாக இளையராஜா அவர்கள் மூலம் கவிஞர் கிட்ட சொல்லவேண்டும் என்று பரிதவித்துஇருக்கிறார் ரஜினிகாந்த்.
அந்த நாட்களில் இப்பொழுது உள்ளது போல் செல் போன் கள் இல்லை.
ஆதலால் தாஜ் மஹால் வளாகத்தில் இருந்து படப்பிடிப்பு குழுவினர் தங்கி இருந்த நட்சத்திர விடுதி வரை ரஜினிகாந்த் ஒரு பரிதவிப்பை முத்துராமன் அவர்களிடம் வெளிப்படுத்தியவண்ணம் இருந்துஇருக்கிறார்.
ஏன் என்றால் பாடல் பதிவு முடிந்துவிட்டால் மீண்டும் பதிவு செய்வது தயாரிப்பு செலவை கூட்டும் என்பதால் பெரும்பாலும் சாத்தியம் இல்லை.
ஆனால் எப்படியோ நட்சத்திர விடுதிக்கு சென்றவுடன் முத்துராமன் இளையராஜாவை தொடர்பு கொண்டு விசயத்தை சொல்லிவிட்டார்.
அந்த காதல் பாடலில் காதலின் உன்னத நினைவு சின்னமான தாஜ் மஹால் இடம்பெறவேண்டும் என்ற சூப்பர் ஸ்டாரின் ஆசை நிறைவேறியது.
சென்னை வந்தவுடன் இளையராஜாவை சந்தித்த ரஜினிகாந்த் பாடலை பற்றி கேட்டு இருக்கிறார்.
வா வா கண்ணா வா என தொடங்கும் அந்த பாடலை கேட்ட ரஜினிகாந்த் வியப்பின் உச்சிக்கே போய் விட்டார் .
காரணம்,
தாஜ்மஹாலின் காதிலே ராமகாதை கூறலாம்
மாறும் இந்த பூமியில்
மதங்கள் ஓன்று சேரலாம்
என்ற வரிகள்தான்.


காதல் பாடலில் காதலின் நினைவு சின்னம் என்ற அந்த தளத்தில்
தாஜ் மகாலை தொடர்பு படுத்தி எழுதுவார் என்றுதான் நினைத்தேன்.
தாஜ்மகாலை மையப்படுத்தி மதங்களையே ஒற்றுமை படுத்தி விட்டாரே என்று வியந்து இருக்கிறார்.
இந்த பாடலில் நான் வியக்கும் கவிதை நயம் என்னவென்றால்,
தாஜ்மகால் என்ற அந்த காதலின் வசந்த மாளிகை உயிர் அற்ற ஒரு கட்டடம் தான்.
ஆனால் அதற்குள் ஒரு உயிர்ப்பை கண்டு அதன் காதிலே ராமகாதை கூறும்  மு மேத்தாவின் கவிதை வித்தகம் வியக்க செய்தது.