Friday, December 27, 2019

பிறை நிலவும் பிள்ளை தமிழும்




என்னோடு பணியாற்றும்
ஒரு இஸ்லாமிய சகோதரன் கேட்கிறான்
நாங்கள் யாருக்கு என்ன தீங்கிழைத்தோம்?

 எதன் பொருட்டு வெறுக்கப்படுகிறோம்

எதனால் ஒதுக்க படுகிறோம் ?

என்ன பதிலை நான் சொல்வது


உயர்த்தி பிடிப்போம் வள்ளலாரின்
அன்பு நெறியை
மாயட்டும் மறையட்டும்
மதவெறி
இந்த மண்ணை விட்டு 
சிலரின் மனதை விட்டு 

அன்பை வைத்து
நீ ஒரு தொட்டில் கட்டு
மனிதகுலம் நித்திரை கொள்ளட்டும்
அமைதி பெற்று
உயிர் போகும் பொழுது
மதம் பார்ப்பவர் உண்டோ
என் மதத்தவர்தான் மருத்துவராய்
வர வேண்டும் என்று அடம் பிடிப்பவர் உண்டா

இசை ஞானி இளைய ராஜா தன்னை
 ஈன்றெடுத்த அன்னை 
சின்னதாயீ அம்மை
தன் மகனின் நண்பன்
கவிஞர் முகமது மேத்தாவின்
நெற்றியிலே 
இட்டார் திரு நீறு

பிறை நிலவை போலல்லவா
அது எனக்கு காட்சி அளிக்கிறது
மத நல் இணக்கத்திற்கு
ஒடி வந்து சாட்சி அளிக்கிறது

உயர்த்தி பிடிப்போம் வள்ளலாரின்
அன்பு நெறியை
மாயட்டும் மறையட்டும்
மதவெறி
இந்த மண்ணை விட்டு 
சிலரின் மனதை விட்டு 



ஈழ தமிழரையும் இஸ்லாமியரையும்
திட்டமிட்டு புறக்கணிக்கும்
திமிர் போக்கை முறியடிப்போம் 

பிறை நிலவும் பிள்ளை தமிழும்
ஒன்றாக கைகோர்ப்போம்


No comments:

Post a Comment