என் இனிய சகோதரனே!
உன்னால்
உணர முடிகிறதா ?
அருகருகே
அமைந்த நிலப்பரப்பையும்
பிணைந்திருக்கும்
மனிதர்களையும்
துண்டாடும்
இந்த எல்லைக்கோடுகளை?
எல்லைக்கோடுகள் உண்மையல்ல
.
எல்லைக்கோடுகள் உண்மையல்ல
.
அவை கற்பனையானவை
மனிதர்களால்
வரையப்பட்டவை
பிரித்து
ஆளும் சூழ்ச்சிக்காக.
தென்றலுக்கு
கடிவாளம் போட கூடுமோ ?
தென்றலின்
இயக்கத்திற்கு
தடை போட முடியுமா ?
சூரியன்
ஒளி வீசுவதை
நிறுத்த முடியுமா
?
என்னதான் முடியும்
அற்ப எல்லைக்கோடுகளால்?
தென்றலை போலவும்
சூரியனின் ஒளியை
போலவும்
அன்பு
கட்டுக்குள் அடங்காது
எல்லைகளுக்குள்
முடங்காது
வாருங்கள் சகோதரர்களே
!
கைகோர்த்திடுவோம்
இந்த உலகத்தையே
ஒன்றாக்கி பிணைத்திடுவோம்
(நான் மொழிபெயர்த்த பாரதி நாயக் (ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர்) அவர்களின் கவிதை)
No comments:
Post a Comment