Translate

Wednesday, May 16, 2018

எல்லைக்கோடுகள்



என் இனிய சகோதரனே!

உன்னால் உணர முடிகிறதா ?

 

அருகருகே அமைந்த நிலப்பரப்பையும்

பிணைந்திருக்கும் மனிதர்களையும்

துண்டாடும்

இந்த எல்லைக்கோடுகளை?

எல்லைக்கோடுகள் உண்மையல்ல .
எல்லைக்கோடுகள் உண்மையல்ல .

 

 அவை கற்பனையானவை

மனிதர்களால் வரையப்பட்டவை
பிரித்து ஆளும் சூழ்ச்சிக்காக.

 

தென்றலுக்கு கடிவாளம் போட கூடுமோ ?

தென்றலின் இயக்கத்திற்கு

தடை போட முடியுமா ?

சூரியன் ஒளி வீசுவதை

நிறுத்த முடியுமா ?

என்னதான் முடியும்

அற்ப எல்லைக்கோடுகளால்?

 

தென்றலை போலவும்

சூரியனின் ஒளியை போலவும்

அன்பு

கட்டுக்குள் அடங்காது

எல்லைகளுக்குள் முடங்காது

வாருங்கள் சகோதரர்களே !

கைகோர்த்திடுவோம்

இந்த உலகத்தையே

ஒன்றாக்கி பிணைத்திடுவோம்

(நான் மொழிபெயர்த்த பாரதி நாயக் (ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர்) அவர்களின் கவிதை)






No comments:

Post a Comment