1 | ஆண்கள் எல்லோரும் ஆணவக்காரரே ஆதிக்கம் செய்தால் |
அவர்களை அறவே ஒதுக்கு | |
2 | இல்லாளை மிதிக்கும் ஆண்மகனால் அக்குடும்பம் |
இல்லாது ஒழிந்து விடும் | |
3 | பெண் இனத்தை பேய் என்று இழிக்கும் ஆண்கள் கூட்டம் |
நாய்களுக்கும் இழிவாய்த்தள்ளப்படும் | |
4 | பெண்ணுக்கு பெண்ணை எதிரிகளாக்கும் |
ஆணாதிக்க உலகம் உதிரிகளாகிவிடும் | |
5 | பேராண்மை எனப்படுவது யாதெனின் |
பெண்மையை மதிப்பதே ஆகும் | |
6 | ஆண் ஏவல் செய்தொழுகும் பெண்மையின் அவன் உறவை |
அறுத்தெறிந்த பெண்ணே பெருமை உடைத்து | |
7 | நத்தையாய் ஆணாதிக்க கூட்டுக்குள் முடங்காதே |
பறவையாகு சிறகை விரி | |
8 | மணப்பந்தல் முன்னிறுத்தி வரதட்சனை கேட்கும் |
கயவனுக்கு மாலை இடாதே விலங்கிடு | |
9 | ஒடிந்தும் பின் மடிந்தும் போவார் மண்ணுலகில் |
மனையாள் சொல் கேளாதோர் | |
10 | அகிலத்தையே வென்றிடுவாள் ஆண் சுகத்திற்காய் |
அடி பணிந்து மயங்காதாள் |
Translate
Sunday, October 25, 2015
ஆண்வழிச்சேறல்
புதிய பார்வை
நீதி தேவதையின் கண்களை |
கருப்பு துணியால் |
ஏன் மறைகிறீர்கள் ? |
உண்மையை சொல்லுங்கள் ! |
கையில் இருக்கும் |
தராசு தட்டு ஒரு பக்கமாய் |
சாய்வதை |
கண்டுவிடக்கூடாது |
என்பதால் தானே? |
Saturday, October 24, 2015
ஆறுதல்
நிலவு வரவில்லையே |
என்று |
நீ ஏன் தேய் பிறையாகிறாய்? |
உனக்காகத்தான் கண்சிமிட்டுகின்றன |
நட்சத்திரங்கள் |
ஏராளமாய்! |
கடிகார வாழ்க்கை
வாழ்கையை விரட்டியபடி மனிதர்கள் |
மனிதர்களை விரட்டியபடி மரணம் |
நொடி முள்ளை விரட்டியபடி நிமிட முள் … |
நிமிடமுள்ளை விரட்டியபடி மணிமுள் … |
ஒரு தலைவனின் தோல்வி
இங்கே சில |
வெற்றிகளுக்கே கூட விலாசம் |
கிடையாது |
ஆனால் உன்னுடைய |
ஒவ்வொரு தோல்விகளுக்கும் |
சரித்திரமே உண்டு |
Subscribe to:
Posts (Atom)