Translate

Friday, July 27, 2018

வினவிற்கு ஒரு வேண்டுகோளும் சில வினாக்களும்


அம்மன் கோவில் திருவிழாக்களில் வெறும் வேப்பிலையை மட்டும் உடையாக அணிந்துகொண்டு பெண்கள்  தீச்சட்டி தூக்கி கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது பக்தியின் பெயரால் நடைபெறும் அநாகரீகத்தின் உச்சம் என்று கருதிய சிலர் அத்தகு நிலைக்கு எதிராக போராட முனைந்தனர்.


அத்தகைய போராட்டக்காரர்களுள்,  புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் , வள்ளலாரின் சமய நெறி பற்றாளரும்  ஒன்றாக கைகோர்த்து இருந்தனர்.  

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தீவிர அசைவ பிரியர் என்பது அவர் கவிதைகள் மற்றும் அவரோடு அக்காலத்தில் பழகியவர்கள் மூலம் அனைவரும் அறிந்ததே.

மேலும் பாரதிதாசன் ஒரு கடவுள் மறுப்பாளர்.

மேற்கண்ட இரண்டு பண்புகளுக்கும் நேரெதிரானவர் வள்ளலாரின் பற்றாளர்.

ஆனால் அவர்கள் இருவரும் ஒரு பொது நோக்கத்தில் ஓன்று பட்ட காரணத்தாலேயே போராட்ட களத்தில் கைகோர்த்தனர்.

வினவு தளத்திற்கும் , ம.க .இ .க விற்கும் என்னுடைய வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் மேற்கண்ட நிலைப்பாடே.

நீங்களும் பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டலையே சாடுகிறீர்கள்.

நீங்கள் பன்னாட்டு முதலாளிகள்  என்று சொல்வதை அவர்கள் இல்லுமினாட்டிகள் என்கிறார்கள்.

உப்பு கொண்டும் நிலக்கரி கொண்டும் பல் துலக்குவதை கிண்டல் செய்த (இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ) பற்பசை விளம்பரங்கள்

உங்க டூத் பேஸ்ட் –ல் உப்பிருக்கா? என்று இப்போதைய விளம்பரங்களில் மக்களை மூளைச்சலவை  செய்வதேன்?

இந்த கேள்வியைத்தானே ஹீலர் பாஸ்கர் முன்வைத்தார்?
இதில் பித்தலாட்டம் எங்கு உள்ளது ?
பன்னாட்டு பற்பசை நிறுவனத்திடமா ?
ஹீலர் பாஸ்கர் இடமா?
அனைத்து விஷயங்களிலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் வினவு ஏன்
பாரிசாலன் மற்றும் ஹீலர் பாஸ்கரை கடுமையாக தாக்கவேண்டும் ?
விடையளிக்குமா வினவு என்பதே என் வினா ?
பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின்
கூட்டு ஐக்கியம் தான் உலகில் இன்று பெரியண்ணன் வேலை பார்க்கிறது என்பதை வினவு மறுக்குமா?
சோவியத் ஒன்றியம் உடைந்த போது,

கவிஞர் மு.மேத்தா தன் கவிதை ஒன்றில்,
இதுவரை
உலகை நிலை
நிறுத்திக்கொண்டிருந்த
தராசு தட்டின்
எடை கல் ஓன்று நொறுங்கியதால்
அதிகார லாபம் அடைந்தவர் யாரோ?
அவசர லாபம் அடைந்தவர் யாரோ ?

என்று எழுதியிருப்பார்.
கவிஞர் மு.மேத்தாவின் கூற்று ப்படி,
அமெரிக்கா என்ற ஒற்றை தலைமையின் அதிகார நர்த்தனம் தானே
இன்று உலகில் நடை பெறுகிறது ?
இதை வேறு வார்த்தைகளில் சொன்னால் பித்தலாட்டமா ?
(பிரிட்டிஷ் மகாராணி - - -  இல்லுமினாட்டிகள் - - - பிரீ மசனோரிகள்)
(அமெரிக்கா என்ற நாடே இங்கிலாந்து இல் இருந்து குடியேறியவர்களின் தொகுதிதான் )
 மாறுபட்ட வார்த்தைகளை பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள் .
சரியான எதிர்வாதம் செய்யுங்கள் .
தமிழ் ஈழம் அழிக்கப்பட்ட காரணம் என்ன ?
முரண்பட்டு நிற்கும் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தமிழ் ஈழத்தை அழிக்க மட்டும்
ஒன்றிணைந்தது எப்படி ?
திரைமறைவில் ஒன்றிணைத்த சக்தி எது ?
அந்த சக்திக்கு என்ன பெயர் இட்டு அழைக்கலாம் ?
புவிசார் அரசியல் என்றா ?
சர்வதேச வல்லரசு சக்திகள் என்றா ?

பன்னாட்டு நிறுவனங்களின் தரகு தலைவர்களை கொண்ட பொம்மை அரசாங்கங்கள் என்றா ?

இன்று  வெள்ளிக்கிழமை என்றால் தான்  ஒப்புக்கொள்வீர்களா ?
நேற்று வியாழக்கிழமை என்றாலோ, நாளை சனிக்கிழமை என்றாலோ

சண்டை செய்வீர்களோ ?
வினவிடம் இருந்து விளக்கம் எதிர்பார்க்கும்,



  •   தமிழ்மைந்தன் சரவணன்











ஒரு மறுப்புரை


ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலன் குறித்த வினவு தளத்தின் கட்டுரைக்கு என் மறுப்புரை.
கட்டுரையாளர், ஹீலர் பாஸ்கரின் மற்றும் பாரிசாலனின்  காணொளிகளை முழுமையாக காணவில்லை என்பது நன்றாக புலனாகிறது.
முதலாவதாக ஹீலர் பாஸ்கர் சொல்வது இயற்கை வைத்தியம் அல்ல. நம் பாரம்பரிய மருத்துவமும் அல்ல.
மருந்தில்லா மருத்துவம் என்பதே ஹீலர் பாஸ்கர் சொல்வது.
மேலும் பாரிசாலன் மருத்துவம் குறித்து அதிகம் பேசியதில்லை.
தடுப்பூசிகளின் பின் உள்ள சர்வ தேச சதி வலைப்பின்னல் குறித்து கேள்விஎழுப்பப்பட்ட போதுகூட பாரிசாலன் ,இது குறித்து தனக்கு அதிகம் தெரியாது  என்றும் ஹீலர் பாஸ்கர் தான் அதிகம் மருத்துவ உலகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். அவருக்கு தான் அதற்காக நன்றி சொல்வதாகவும் பதிவு செய்தார்.

பாரிசாலன் தமிழ் தேசீய சிந்தனையையே முன்னிறுத்துகிறவர்.
மேலும் , ஹீலர் பாஸ்கரை அவருடைய மருத்துவத்துறை விழிப்புணர்வு பணிக்காக பாராட்டிய பாரிசாலனே,
சீமான் மற்றும் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த ஹீலர் பாஸ்கரின் நிலைப்பாட்டை கடுமையாக விமரிசனம் செய்திருந்தார்.

இந்த வேளையில், இன்னொரு கருத்தையும் இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
“பதிமூன்று பேரின் ரத்த உறவுகளின் வழி வந்த சுமார் ஆறாயிரம் பேர் இந்த உலகை தங்களின் மித மிஞ்சிய பண பலத்தால் ஆட்டி படைக்கின்றனர்.
இவர்களே இல்லுமினாட்டிகள்.
இவர்களின் கட்டளையை நிறைவேற்றுபவர்கள் பிரீ மஷனரிகள்.
இந்த பெருவணிக கும்பலை அல்லது இல்லுமினாட்டிகளை கட்டுப்படுத்துவது பிரிட்டிஷ் மகாராணி.” இதுவே ஹீலர் பாஸ்கர் கூறவரும் கருத்தின் சுருக்கம்.
இதில் கட்டுரையாளர் சொல்வதுபோல் நம்பமுடியாத கட்டுக்கதை எங்கே இருக்கிறது?
ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலனின் அனைத்து கருத்துக்களுடனும் முழுமையாக நான் உடன்படவில்லை.
நான் முரண்படும் நிலைப்பாடுகளும் அவர்கள் இருவரிடமும் உண்டு.
"எதற்குமே போராடாதே அதற்கு பதில் உன்னை தடை செய்திருக்கும் அந்தசெயலை நீயே செய் . (உ –ம் ஜல்லி கட்டு போராட்டம்) என்கிறார் ஹீலர் பாஸ்கர். 
இதில் எனக்கு உடன்பாடில்லை.
அதைப்போலவே தந்தை பெரியார் குறித்த மற்றும் பெண்விடுதலை குறித்த பாரிசாலனின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லை.

          - தமிழ்மைந்தன் சரவணன்