Translate

Sunday, April 5, 2020

மாயக்கைகள் யாதடா ?




என் பள்ளி பருவத்தில்
தமிழ் நாட்டின் ஆளுநர் பெயரு குரானா
இப்ப அகில உலகத்தையும்
 ஆட்டிப்படைக்கும் 
கண்ணனுக்கு தெரியாத 
சக்திக்கு பெயரு கொரானா 

அந்த குரானா தமிழ் நாட்டை ஆண்டவரு
இந்த கொரானாவோ
ஆண்டவர்கிட்டவே மக்களை அனுப்பி வைக்க 
பேய் நகம் கொண்டு நீண்டவரு 

சாளரத்தின் வழியே பார்க்கிறேன்
 நீ 
சௌக்கியமா
 என கேட்கும் சாயங்கால காற்று
 எரி நெருப்பாய் என்னை சங்கடப்படுத்துகிறது

அங்கே 
நான் கண்ணில் கண்டவை வார்த்தைகளாய் 
இதோ இங்கே 

ஒடி ஒடி உழைச்ச ஜனம் 
ஓஞ்சுபோயி கெடக்குதையா! 
அந்த உழைப்பின் உன்னதங்களின் வயிறு இப்ப காஞ்சு கெடக்குதையா 

உல்லாசமாய் சுத்தி வந்த செல்வசீமான்களின் மனம்
ஓரிடத்தில் அடங்க மறுத்து 
புழுங்கி தவிக்குதய்யா ! 

மதம் பார்த்து ஜாதி பார்த்து 
வருவதில்லை வியாதிகள் 
தீர்ந்திடுமா ஒரு சிலரின்
மனவியாதிகள்? 

ஊர் அடங்கு சட்டம் என்று அறிவிக்கின்றார்
ஓட்டுமொத்த உலகடங்கி போனதடா! 

கலகங்கள் இல்லாத உலகம் கேட்டோம்
 அமைதியான பூமியை கேட்டோம் 
ஏகன் இறைவனிடம் கேட்டது ஏகாந்த அமைதி
மயான அமைதியல்லவா எங்கும் மண்டிக்கிடக்கிறது ?

ஓயாமல் சுழல்கின்ற பூமியின் இயக்கத்தை 
நிறுத்த துடிக்கும் மாயக்கைகள் யாதடா ? 
எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளே
 நேரில் தோன்றி
 பதிலை நீயும் எமக்கு கூறடா !