Translate

Friday, June 27, 2014

அவள்

உன் கூந்தல் 
பகலை பழிக்கும் இருட்டு
 
உன் கண்களால் 
பருவ மனங்களின் திருட்டு
உன் கூந்தல் 
பகலில் தோன்றிய இரவு
உன் கண்களால் 
பருவ மயக்கங்கள் என்னுள் வரவு
உன் கூந்தல் 
அசைந்தாடும் கடலலையின் அழகு
உன் கண்களால் 
என் மனம் ஓர் உதிர்ந்த இறகு
உன் கூந்தல் 
கருப்பு கவிதைகளால் ஆன தொகுப்பு
உன் கண்களால் 
நடக்கிறது ஒரு காதல் வகுப்பு
நீ உறவை கொடுக்கும் உறவு
உன் கண்கள் நம் உயிர்களை பிணைக்கும் கயிறு
மொத்தத்தில் நீ ஒரு
அழகின் அணிவகுப்பு 
உனக்கான இந்த 
கவிதை என் கைகுவிப்பு

Thursday, June 26, 2014

சுயதரிசனம்


நல்ல அமைதி வந்து 
குடிபுகும் உன் மனதில்

நல்ல மலர்களால் நிறைந்துவிடும்
உன் வீட்டு கொல்லை

பட்டினத்தான் வாழ்ந்த 
வீடு மேற்குப்புறத்தில்

பண்ணை புரத்தான்  பாட்டு
வரும் கிழக்கில் இருந்து


வெட்ட வெட்ட 
மடிந்து விழும் இலையும் கிளையும் 
வீசும் காற்றில் ஈரம் கோர்க்க
மீண்டும்  துளிர்த்து வரும்
யாருமற்ற பாலை நிலமே 
வாழ்கை என்று எண்ணிவிடாதே
சொந்தமில்லா சொந்ததில்தான் 
வசந்தம் வரும் மறந்துவிடாதே
பணத்தை வைத்து 
பிணத்தை எழுப்ப முடியாதே 
பணமே  இல்லை என்றால்
பிணம் கூட சுடுகாடு சேராதே 

பழந்தமிழ் இலக்கியங்கள்

நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் இன்றைய நாட்களில் எல்லோருக்கும்
புரியவில்லை கூறுவோர் உண்டு .
அந்த கூற்று உண்மையும் கூட
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வை சொன்னார்


பேரா.சோ.சத்தியசீலன்
நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் கண்டால் ஒரு இருநூறு
பழந்தமிழ் வார்த்தைகள் மட்டுமே இன்றைய காலத்திற்கு  அன்னியமாக இருக்கும்




அதற்கு மட்டும் ஒரு பொருள் அகராதி உருவாக்கினால் போதும்
நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் 

இன்றைய மக்களிடம் கொண்டு சேர்த்து விடலாம்

Wednesday, June 25, 2014

ஹைக்கூ - 4

இறந்து போன தலைவனுக்காக
மௌன அஞ்சலி செலுத்தும் வேளை
பறவைகளின் குதூகல ஒலி

ஹைக்கூ - 3

கருப்பு வண்ண சேலையில் இருந்து 
நழுவி செல்லும் பூக்கள்
நதியின் மீது ததும்பும் மரத்தின் நிழல்

ஹைக்கூ -2

பகலின் நினைவுகளே
நான் அந்த பாதையில் செல்கையில்
வழித்தடம் காட்டும் கைவிளக்கு

Tuesday, June 24, 2014

ஆப்கானிஸ்தானும் இலங்கையும்

ஆப்கானிஸ்தானும் இலங்கையும்
புத்தனின் சிலையை
சத்தத்தால்
நொறுக்கினார்கள்
பீரங்கி சத்தத்தால்
நொறுக்கினார்கள்
புத்தனின் சிலையை
இரத்தத்தால்  
குளிபாட்டினார்கள்


 
தமிழர்களின் இரத்தத்தால் 
குளிபாட்டினார்கள்
புன்னகை பூத்தான்
புத்தர் பெருமான்
 
அற்ப மானிட பதர்களை
எண்ணி!