சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் மு.மேத்தாவை சந்தித்து அவருடைய திரைபடபாடல்களை |
நான் திறனாய்வு செய்து இருப்பது குறித்து பேசிகொண்டிருந்தேன். |
நான் எழுதி இருந்த கட்டுரைகளை படித்து பார்த்த கவிஞர் |
என் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்து விட்டு |
கட்டுரைகள் குறித்து சில விளக்கங்களை என்னிடம் |
கேட்டார். |
ஓங்கும் உந்தன் கைகளால் வானை புரட்டி போடு |
புது வாழ்வின் கீதம் பாடு |
என்றுதானே எழுதிருந்தேன் |
தூங்கும்உந்தன் கைகளால் வானை புரட்டி போடு |
புது வாழ்வின் கீதம் பாடு |
என்று வரிகளை குறிப்பிட்டு இருக்கிறீர்களே |
என்று கேட்டார் |
பாட்டு புத்தகத்தில் அவ்வாறு இருப்பதை நான் |
சொன்னேன். |
கவிஞரின் திரைப்பட பாடல்கள் தொகுப்பு நூல் |
ஓன்று 1996 நர்மதா பதிப்பக நூலாக |
வந்துள்ளது. |
ஆனால் நான் குறிப்பிட்ட சூரிய வம்சம் படத்தில் |
இடம்பிடித்த நட்சத்திர ஜன்னலில் என தொடங்கும் |
பாடல் 1996 க்கு பிறகு என்பதால் அதில் இல்லை. |
எனவே நடைபாதைகளில் விற்கும் அந்தந்த |
திரைப்படங்களின் சிறு அச்சு நூலை நான் |
வாங்கி இருந்தேன் |
அதில்தான் கவிஞர் குறிப்பிட்ட இந்த பிழை |
கவிஞரை சந்தித்து வந்த பின்பு சில நாட்களில் வேறு |
ஒரு அச்சு பிழையை கண்டுபிடித்தேன். |
பொன்னாடை இமயத்திற்கு போர்த்திவிடலாம் |
என்றுதான் கவிஞர் எழுதி இருந்தார். |
ஆனால் அந்த சிறு அச்சு நூலில் |
பொன்னாடம் இமயத்திற்கு போர்த்திவிடலாம் |
என்று வரிகளை பிழையாக குறிபிட்டு இருந்தார்கள் |
திருக்குறளுக்கு நான் உரை எழுதுவது என்பது |
இமயத்திற்கு பொன்னாடை போர்த்திவிடுவதை போன்றது |
என்று தலைவர் கலைஞர் சொன்னதாக |
கவிஞர் ஒரு நேர்காணலில் |
குறிப்பிட்டு இருந்தார் |
அந்த பாதிப்பிலேயே அந்த உவமையை கையாண்டதாகவும் |
சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்குறீர்கள் என்று |
கலைஞரே பாராட்டியதாகவும் கவிஞர் மேத்தா அந்த |
நேர்காணலில் சொல்லிருந்தார். |
அந்த நேர்காணலை படித்த போதே இதையும் |
கண்டுகொண்டேன் |
திரைப்படங்களில் கருத்துள்ள பாடல்கள் அமைவதே அரிது. |
அப்படி அமைந்த நல்ல பாடலையும் அச்சு பிழை |
செய்தே இப்படி கொலை செய்கிறார்களே என்று |
வருந்தினேன் |
Translate
Tuesday, February 10, 2015
இமயத்திற்கு பொன்னாடை
Subscribe to:
Posts (Atom)