Translate

Sunday, June 16, 2019

மெல்லிய நூலும் அப்பளமும்

மெல்லிய நூலாய் 
நீ தனித்திராதே !

கயிறாக ஒன்றாகி 
உருவாகி முறுக்கேறு 

உன்னை அழித்திட 
யாராலும் முடியாதே !

கவிதை வரிகளை 
ஆசிரியர் உணர்வோடு 
ஒன்றி வாசித்து கொண்டிருந்தார் .


திடுமென எழுந்த 

மாணவன்  ஒருவன் கேட்டான் 


அய்யா !
நீங்கள் சொல்வது 

மெல்லிய நூலுக்கு சரிதான் 


அப்பளம் நொறுக்கினால்தானே  நல்லது 

ஒன்றாய்  இருந்து விட்டால் காற்றில் 

பறந்துடுமே ?

மாணவனின் கேள்வியால் 
விழி பிதுங்கி நின்றார் ஆசிரியர் .

Saturday, June 15, 2019

கடிகாரம்

நேரத்தை தெரிந்து கொள்ள 
கடிகாரத்தை பார்த்தேன் .

நேரத்தை காட்டும் கடிகாரம் 
எனக்கு உலகத்தையே
காட்டியது .

ஒரு மணி நேரத்தை 
கடக்க 

3600  முறை ஓடி  சலிக்கும் 
நொடி முள் ஏழை வர்க்கமாக 

60 முறை ஒடி இலக்கை தொடும் 
நிமிடமுள் நடுத்தர வர்க்கமாக 

ஒரே ஒரு முறை ஒய்யாரமாக 

நகர்ந்து நடைபோடும் மணி முள் 

பணக்கார வர்க்கமாக .