மோடியும் அமிட்சாவும் பிற நாடுகளில் இருந்து வந்த ஹிந்துக்கள் கிறிஸ்தவர் புத்த மற்றும் சீக்கிய இத்தனை மதத்திற்கு கருணை காட்டுவார்களாம் முஸ்லீம் மட்டும் கூடாது என்பார்களாம் இந்த முஸ்லீம் களை மட்டும் வெறுக்கும் போக்கு ஏன் ?
எங்கள் ஈழ தமிழரில் பெரும்பான்மை ஹிந்துக்கள் தானே அவர்கள் பல ஆண்டுகள் அகதி முகாம் இல்
பரிதவிக்கிறார்களே ?
அவர்கள் உங்கள் பார்வையில் ஹிந்து இல்லையா என்று நாம் கேட்டால்,
மாண்புமிகு அமைச்சர் அமிட்ஷா பதில் சொல்கிறார்
அங்கு மத ரீதியான துன்புறுத்தல் இல்லையாம் அவர்கள் விரட்டி அடிக்க படவில்லையாம் உரிமை கேட்டு சண்டை இட்டு வருகிறர்களாம் .அமைச்சர் சொல்கிறார்
ஐயோ கடவுளே இந்த கொடுமைகளை நான் எங்கு போய் என்னவென்று உரைப்பேன்?
விதியே விதியே என்ன செய்ய நினைத்தாய் தமிழ் சாதியை
என்று பாரதியின் வார்த்தைகளில் அல்லவா எனக்கு கத்த தோன்றுகிறது
ஈழ தமிழன் எங்கே சண்டை இட்டான் அவன் சிங்களரோடு இணக்கமாய் தானே இருந்தான்
சிங்கள ஓன் ஆக்ட் என்று சட்டம் இயற்றி அவன் அல்லவோ எம்தமிழனை அடிமை செய்தான்
1983இல் கறுப்பு ஜூலையில் இனவெறி நெருப்பாட்டம் ஆடினான் எத்தனை தமிழர் அய்யா எத்தனை தமிழர் அய்யா
தமிழ் ஈழத்தில் உள்ள திருகோணமலையில் உள்ள சிவன் ஆலயத்தின் சிவாச்சாரியார் உயிரோடு கொளுத்தப்பட்டார் அப்பொழுது பிரபாகரனுக்கு ஐயிந்து வயது
அப்பொழுது இருந்து ஆயிரக்கணக்கான ஹிந்து ஆலயங்கள் தமிழ் ஈழ மண்னில் இடிக்கப்பட்டுள்ளன இவையெல்லாம் மத ரீதியான துன்புறுத்தல் இல்லையா பாகிஸ்தான் ஹிந்துக்களுக்கு ஒரு நியாயம் தமிழீழ ஹிந்துக்களுக்கு ஒரு நியாயமா?