Translate

Monday, November 12, 2018

மணி ஓசை என்ன சொல்லுதோ







புதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தா அவர்களின் கைவண்ணத்தில் ,


மெல்லிசை மன்னர் எம் .எஸ் .வி அவர்களின் இசை வண்ணத்தில் ,


உருவான பாடல்.


பாடல் இடம்பெற்ற திரைப்படம்: நாலும் தெரிந்தவன்


படம் வெளியிடப்படவில்லை


பாடலை பாடியவர்கள் : எஸ் .பி .பாலசுப்ரமணியம் & எஸ் .ஜானகி


 


மணி ஓசை என்ன சொல்லுதோ


நமதாசை ஓன்று என்றதே


மணி ஓசை என்ன சொல்லுதோ


நமதாசை ஓன்று என்றதே


 


அருகில் சுடாது பிரிவில் விடாது


அனல்தான் யாது?


உணவும் தொடாது உறக்கம் வராது


அதுதான் காதல்


 


பூங்காற்றிலே ஒரு பாய் போடவா?


தங்க புதையல் போல உன்னை நான் தேடவா


ஆ ஆ ஆ


 


 


மாந்தோப்பிலே குழல் நீராடவா?


உந்தன் மனதில் கூவும் குயில் நானாகவா?


 


ஆ ஆ ஆ


புல்லாங்குழல் இவள் சொல்லானதோ


இந்த பூவும் காமன் தொடும் வில்லானதோ


 


பூமன்றமே  இரு தோளானதோ?


உந்தன் கொடியை தேட ஒரு தேரானதோ?


 


அருகில் வராது தனிமை விடாது


அழகின் தூது


இரு கை படாது


இளமை தொடாது சுகம்தான் ஏது?


 


மணி ஓசை என்ன சொல்லுதோ


நமதாசை ஓன்று என்றதே


மணி ஓசை என்ன சொல்லுதோ


நமதாசை ஓன்று என்றதே


 


என் வானிலே ஒளி நீயாகலாம்


உந்தன் இதயம் தேடும் சுகம் நானாகலாம்


என் கண்ணிலே உனை நீ பார்க்கலாம்


இங்கு உனது கண்ணில் எனை நீ பார்க்கலாம்


 


 


ஆகாயமே எழில் மேலாடையோ


இந்த கனவு சூடும் ஒரு பாவாடையோ


பாமாலையே உன்னை நான் பாடவா?


வந்து படித்து பார்த்து பொருள்தான் கூறவா?


 


நினைவை  கொல்லாது நினைவில் இல்லாது


திருநாள் பாராய்


வரமே தராது சுகமே இராது


அருகே வாராய்


 


மணி ஓசை என்ன சொல்லுதோ


நமதாசை ஓன்று என்றதே


மணி ஓசை என்ன சொல்லுதோ


நமதாசை ஓன்று என்றதே


 


பாடலை   யூ டியூபில் காண கீழ்கண்ட லிங்கை சொடுக்கவும்