Translate

Thursday, May 18, 2017

நான் மொழிபெயர்த்த பாரதி நாயக் (ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர்) அவர்களின் ஹைக்கூக்கள்

நான் மொழிபெயர்த்த பாரதி நாயக் (ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர்) அவர்களின் ஹைக்கூக்கள்

வசந்த கால தென்றலின் மென்மையான உணர்வு

மாமர மலரின் தலைமுடி மணம்

யாரோ பின்னால் அழைப்பார்கள்






குளிர்கால மூடுபனி மலைகளில் நிறைகிறது

கதிரவனின் கதிரொளி பூமியை கதகதப்பாக்குகிறது

போர்வைக்குள் ஒரு மந்தகாச கனவு






வயல் வெளிகளில் பச்சைநிற கதிரலைகள்

புன்னகை பூக்கும் விவசாயி

எங்கோ இடி இடிக்கும் ஒரு கருப்பு மேகம் 





செந்நிற கதிரவன் கடலில் மூழ்குகிறான்

இடுக்கிகளை கொண்ட நண்டுகள் கடற்கரை மணலில் 

உலாவுகின்றன

நகரம் அமைதியான உறக்கத்திற்கு செல்கிறது 

Tuesday, May 9, 2017

பிராமினாள் ஹோட்டல்

“பிராமினாள் ஹோட்டல்”  என்ற பெயர் பலகைக்கு எதிரான
தி. க வின் போராட்டத்தை விமர்சனம் செய்யும் சிலர்,

“தேவர் ஹோட்டல்” “நாயுடு ஹால் “ போன்ற பெயர் பலகைகளுக்கு எதிராக ஏன் போராடவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இப்படி விமர்சனம் செய்யும் இவர்கள் ஒரு உண்மையை வசதியாக மறந்து விடுகின்றனர் அல்லது மறைத்து விடுகின்றனர்.

அது என்னவென்றால்,  “தேவர் ஹோட்டல்” “நாயுடு ஹால் “ போன்ற

பெயர் பலகைகளை போலவே “அய்யர் ஹோட்டல் “ என்றும் இருக்கிறது.
இதை தி.க வினர் அகற்ற சொல்லி போராடினார்களா?
இல்லையே!
பின்பு ஏன் “பிராமினாள் ஹோட்டல்”  என்ற பெயர் பலகைக்கு மட்டும் எதிர்ப்பு என்ற கேள்வி எழலாம்.


அய்யர் என்ற சொல் ஒரு சாதியை மட்டும் குறிக்கிறது .
அதுவும் அவர்களின் வர்ணாசிரம (படிநிலை) கருத்தாக்க படி

உயர்ந்த நிலை என்ற பொருளிலேயே அமைகிறது.

“அய்யர் “ என்ற வார்த்தையை விட “பிராமினாள்” என்ற வார்த்தை
கொடூரமான சமூக அநீதியை உள்ளடக்கியது.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கூறுகிறார் :

“பிராமினாள்” என்றால் கற்புள்ள பெண்ணிற்கு பிறந்தவர்கள்
மற்றவர்கள் அனைவரும் கற்பிழந்த பெண்ணிற்கு பிறந்தவர்கள்

என்று அந்த ஆதிக்க வெறி பிடித்தவர்கள் பொருள் சொல்கிறார்கள்.

என் அன்னை ஒரு வேசி: நான் ஒரு வேசி மகன்: என்று
என்னை கட்டாயப் படுத்தி ஒப்புகொள்ள  செய்கிறான்.

இந்த சமூக அநீதியை எப்படி பொறுப்பது ? எப்படி ஏற்பது?
என்று முழங்குகிறார்.





ஜே. ஜே சில குறிப்புகள்

எழுத்தாளர் ராமகிருஷ்ணன் ஒரு நேர்காணலில், தன்னுடைய கல்லூரி பருவத்தில் சுந்தர ராமசாமியின் நாவலான ஜே. ஜே சில குறிப்புகளை படித்து கொண்டிருந்த பொழுது அவரது அண்ணனை காண வந்த நண்பர் இந்த நாவல் கம்யுனிஸ்டுகளை கிண்டல் செய்து எழுதப்பட்டது என்று கூறியதாக பதிவு செய்திருந்தார்.

என்னை பொறுத்தவரை அந்த நாவல் கம்யுனிஸ்டுகளை கிண்டல் செய்து எழுதப்பட்டதல்ல.

போலி கம்யுனிஸ்டுகளையே கிண்டல் செய்து எழுதப்பட்டது.


இந்த தவறான சித்தரிப்பு முயற்சி, எழுத்தாளர் ராமகிருஷ்ணன் திட்டமிட்டு செய்வதா? அல்லது அவரது அண்ணனுடைய நண்பரின் கருத்தை பதிவு செய்கிறாரா? என்பது கேள்வி குறியே.

Friday, May 5, 2017

கலீல் கிப்ரான்

  கலீல் கிப்ரான்  லெபனான் நாட்டை சேர்ந்த கவிஞர்.
இந்த வாழ்க்கை  என்பது என்ன ?
முடிவின்மையில் ஒரு நொடிதானே ?
என்று கேள்வி எழுப்பியதின் மூலம் 

நூறாண்டுகள் வாழ்ந்தவரின்  வாழ்க்கையின் பிரம்மாண்டத்தை
 உடைத்து  மிக மிக சுருக்கியவர்.


இந்த சமுதாயத்தின் குற்றவாளிகளை ஒரு மரத்தின்
பழுத்த இலைகளுக்கு  உருவகம் செய்ததன் மூலம்
குற்றவாளிகள் உருவாவதில் ஒட்டு மொத்த  சமூகத்தின்
பொறுப்பையும் முகத்தில் அறைந்தாற்போல் சாடியவர்