Translate

Tuesday, May 9, 2017

பிராமினாள் ஹோட்டல்

“பிராமினாள் ஹோட்டல்”  என்ற பெயர் பலகைக்கு எதிரான
தி. க வின் போராட்டத்தை விமர்சனம் செய்யும் சிலர்,

“தேவர் ஹோட்டல்” “நாயுடு ஹால் “ போன்ற பெயர் பலகைகளுக்கு எதிராக ஏன் போராடவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இப்படி விமர்சனம் செய்யும் இவர்கள் ஒரு உண்மையை வசதியாக மறந்து விடுகின்றனர் அல்லது மறைத்து விடுகின்றனர்.

அது என்னவென்றால்,  “தேவர் ஹோட்டல்” “நாயுடு ஹால் “ போன்ற

பெயர் பலகைகளை போலவே “அய்யர் ஹோட்டல் “ என்றும் இருக்கிறது.
இதை தி.க வினர் அகற்ற சொல்லி போராடினார்களா?
இல்லையே!
பின்பு ஏன் “பிராமினாள் ஹோட்டல்”  என்ற பெயர் பலகைக்கு மட்டும் எதிர்ப்பு என்ற கேள்வி எழலாம்.


அய்யர் என்ற சொல் ஒரு சாதியை மட்டும் குறிக்கிறது .
அதுவும் அவர்களின் வர்ணாசிரம (படிநிலை) கருத்தாக்க படி

உயர்ந்த நிலை என்ற பொருளிலேயே அமைகிறது.

“அய்யர் “ என்ற வார்த்தையை விட “பிராமினாள்” என்ற வார்த்தை
கொடூரமான சமூக அநீதியை உள்ளடக்கியது.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கூறுகிறார் :

“பிராமினாள்” என்றால் கற்புள்ள பெண்ணிற்கு பிறந்தவர்கள்
மற்றவர்கள் அனைவரும் கற்பிழந்த பெண்ணிற்கு பிறந்தவர்கள்

என்று அந்த ஆதிக்க வெறி பிடித்தவர்கள் பொருள் சொல்கிறார்கள்.

என் அன்னை ஒரு வேசி: நான் ஒரு வேசி மகன்: என்று
என்னை கட்டாயப் படுத்தி ஒப்புகொள்ள  செய்கிறான்.

இந்த சமூக அநீதியை எப்படி பொறுப்பது ? எப்படி ஏற்பது?
என்று முழங்குகிறார்.





No comments:

Post a Comment