Translate

Tuesday, May 29, 2018

அரசியல் தத்துவம்



உலை தகிப்பாய்

உடலை பதம் பார்க்கும்

உச்சி வெய்யில்

 

கட்சி ஊர்வலத்தில்

கடைக்கோடியில் வந்தவன்

ஓரமாய் ஒதுங்கி

வேடிக்கை பார்த்தவனை

நோக்கி வினா தொடுத்தான்:

அய்யா!

நீங்கள் வலது சாரியா?

அல்லது இடது சாரியா?



கேள்வியால் கிறுகிறுத்து போனவன்

பரிதாபமாக பதில் சொன்னான் :

ஒன்றும் புரியவில்லையே!

நான் ஒரு பாதசாரி.


No comments:

Post a Comment