வசதியிருக்கிறவன்
தரமாட்டான் - அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
- இந்த வரிகள் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு திரைப்படப்பாடலில் எழுதியது.
இந்த வரிகளை ஒரு நூலில்
வாசித்தபோது
என் நினைவு புத்தகம் தன்
பழைய பக்கங்களை புரட்டி பார்த்தது .
சில வருடங்களுக்கு முன் நான் பார்வையாளனாக
கலந்து கொண்ட ஒரு
விழாவின்
நாயகன் அந்த கவிதை
நூலின் ஆசிரியர் தொல் .திருமாவளவன் .
அந்த நிகழ்வில் பலத்த ஆரவாரங்களுக்கிடையில் ,
"சிங்கள
இனவெறியர்கள் ஈழ தமிழர்களுக்கான உரிமைகளை
ஒரு போதும் தரமாட்டார்கள் .
எங்கள்
உரிமைகளை பெறாமால் ஒரு போதும் அவர்களை
விடமாட்டோம் "
என்று அனல் தெறிக்க
உணர்ச்சி
கவிஞர் .காசி ஆனந்தன் சூளுரைத்தார்
.
எப்படி
இருவரும் ஒரே மாதிரி சிந்தித்தார்கள்
?
என்று எண்ணி வியக்கிறேன்.
கவிஞன்
என்பவன் தனி மனிதன் அல்லன்
.
ஒரு மாபெரும் மக்கள் தொகுதியின் ஒற்றை
குரல் என்ற புரிதலே
அந்த புதிரான கேள்விக்கான பதிலாக
பார்க்கிறேன் .
No comments:
Post a Comment