Translate

Tuesday, May 22, 2018

நீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ ?



தேடும் என் காதல் பெண்பாவை

சூடும் உன் மார்பில் பொன்மாலை

காதோரமே உன் கீதாஞ்சலி

கனி தாங்கும் மலர் மேனி

பனி தாங்குமோ ?

நீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ ?

 


இந்த திரைப்படப்பாடலில்,

“நீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ ?”  என்ற

ஒரு பெண்ணை பற்றிய கவிஞர் மு மேத்தா வின் வர்ணணை

புதுமையிலும் புதுமை .

 


வலிமையான எண்ணங்களை எளிமையான சொற்களால் அமைக்க தெரிந்த கவிஞருக்கு, புதுமையிலும் புதுமையாக புதுப்பாதை போடமுடியும் என்பதற்கு இந்த வரிகள் தக்க சான்று .


 

மார்பினில் சூடும் பொன்மாலையின் அழகையும் , காதோரத்து கீதாஞ்சலியையும்

வார்த்தை வலை வீசி பிடிக்கும் கவிஞர் ,

கனி தாங்கும் மலர் மேனி பனி தாங்குமோ ?

என்று அன்பான வார்த்தைகளால் நாயகியை அலங்கரித்தபின்பு ,

சட்டென்று காதல் அரசாங்கமாகவே நாயகியை உருவக படுத்திவிடுகிறார் .

 

No comments:

Post a Comment