Translate

Thursday, August 29, 2013

முகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான்

கவிஞர் .வாலி அவர்கள் ஒருமுறை தன்னை
அறிமுகம் செய்யும் முகமாக பின்வருமாறு குறிப்பிட்டார்


நான் திருவரங்கத்தில் பிறந்தேன்

திரைஅரங்கத்திற்குள் நுழைந்தேன்


சிக்கனமாகவும் சிறப்பாகவும் இருந்த இந்த வரிகள்
என் மனதை கவர்தன.

இதைபோல் ஒவ்வொரு கவிஞர் பற்றியும் எழுத
எண்ணினேன்.


முகவரிகள் என்ற தலைப்பில் கவிதைகள் உதயமாயின.


கவிஞர் மு.மேத்தா

பெரியகுளத்தில் இருந்து

புறப்பட்ட கவிதைநதி

கவிக்கோ அப்துல் ரஹ்மான்

வாணியம்பாடியின்

வானம்பாடி

தாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்


நான் திருச்சியில் உள்ள சேஷசாய் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளோம

இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த பொழுது (1993 -ல்) என்னுடன்

படித்த சங்கர் கணேஷ் மற்றும் ராஜு மேலும் முன்று
மாணவர்கள் விடுமுறை நாளில் கல்லணை சென்று
சுழலில் சிக்கி உயிர் இழந்தனர்.இந்த நிகழ்வு ஒட்டுமொத்த திருச்சியையே சோகத்தில்
ஆழ்த்தியது

கல்லணை சென்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரி

விடுதியை சேர்ந்தவர்கள்


இதில் சங்கர் கணேஷ் மற்றும் ராஜு பால்ய பருவத்தில் இருந்தே நண்பர்கள்

சங்கர் கணேஷின் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள்.

ராஜுவின் அப்பா கால்நடை மருத்துவர்.

சங்கர் கணேஷ்சும் ராஜுவும் ஒன்றாம் வகுப்பில்

இருந்தே ஒன்றாக படித்தவர்கள்


சங்கர் கணேசும் ராஜுவும் நிலகோட்டையை சேர்ந்தவர்கள்.

"விடுதியை விட்டு

செல்லாதே"

"விடுதியை விட்டு
செல்லாதே"
என்று படித்து படித்து சொன்னேனே

இப்படி எங்களை விட்டு பிரிந்து விட்டாயே

என்ற சங்கர் கணேஷின் தாயாரின் கதறல் பார்போரை

உள்ளம் உருக செய்வதாய் இருந்தது.


தினத்தந்தி இதழ இந்த செய்திகளை வெளியிட்டு இருந்தது.அந்த தாயின் தவிப்பை நான் அப்பொழுதே பாடல் வடிவில்
எழுதியிருந்தேன்


அதோடு சில புதிய சரணங்களையும் சேர்த்து எழுதியுள்ளேன்

உங்களது மேலான பார்வைக்கு என் படைப்பை
படையல் ஆக்குகிறேன்

பல்லவி

தாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்
உறங்காத விழிகள் இரண்டும் கண்ணீர் என்னும் ஆற்றில்

சரணம்-1

ஓடிவரும் நதியலைகள்
காலத்தின் கண்ணீர் மொழி
போகுமிடமெலாம் கதை கூறுமோ
சோகங்களை கூறி மெல்ல கலைந்தோடுமோ
நீ நடந்த பாதை எல்லாம்
நான் நடந்து பார்த்தேன் மகனே
தேராக நீ அசைந்த பாதையிலே
நினைவுகளின் ஊர்கோலம் கண்ணே

சரணம்-2

நெஞ்சில் ஆடும் நினைவலையில்
சிறுமலரின் மழலை மொழி
சிலுவையாகி எந்தன் நெஞ்சில் சுமையாகுமோ
சுமைதாங்கி ஒன்றை காலம் தரகூடுமோ
தேன் கொடுத்த பூக்கள் எல்லாம்
சருகாக உதிரும் கோலமே
வேர்பிடித்த மண்ணில்
மழை நீரின் ஈரமே


சரணம்-3

காணுகின்ற கனவுகளில்
துரத்தி வரும் உன் நினைவு
பூமலருகின்ற வேளை புயல் வீசியதோ
தீ இல்லாமலே அனல் பேசியதோ
வான் பார்த்து போகும் பயணம் உனக்கு
மண் மீது நரகம் எனக்கு
நீ நடை வண்டி பயின்ற காலம் மனதில்
நடைபோடும் நேரம் இன்று
நீராக மாறிய மேகமே
கண்ணீராக மாறிய சோகமே

அம்மா சொன்ன கவிதைகள்
என் தாயார் தற்போது உயிருடன் இல்லை

என்றாலும் அவர் பேசிய பேசசுக்கள்


என் நெஞ்சில் என்றும் வாழ்ந்துகொண்டே

இருக்கும்


ஒரு சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன் .

வாசகர்களுக்கு அவரவர் அம்மாவின் நினைவுகள்

அலைமோதும் என்று நம்புகிறேன்


என் தாயாரின் வாயிலிருந்து வரும் சொற்கள்

பல நேரங்களில் கவித்துவமாக இருக்கும்.


தண்ணீர் பஞ்சம் பற்றி அலுப்போடு கூறியது


தண்ணீர் பஞ்சத்தில்

பெரம்பலூர் அக்கானா

மணப்பாறை தங்கச்சிஎன் தாத்தா (அம்மாவின் அப்பா )

சொத்துக்கள் அனைத்தும் ஆண் பிள்ளைக்கே (என் மாமா) உயில் எழுதி வைப்பேன்

என்றதும் மிகப்பெரிய சண்டையும் வாக்குவாதமும்

நடந்தது.

பின்பு சிறிது நேரத்தில் என் சித்தியும் (அம்மாவின்
உடன் பிறந்த தங்கை )அம்மாவும் சமையல்
அறையில் ஏதோ சிரித்து பேசி கொண்டிருந்ததை
காதில் கேட்டுவிட்டு


என்ன பாப்பா ஒரே சிரிப்பா இருக்கு?
என்று கேட்டதற்கு கோபமும் கேலியும் கலந்த
கவித்துவ வார்த்தைகளில் சொன்ன பதில்


எங்க சிரிப்பை யாருக்கும்

நீங்க

உயில் எழுதி வைக்க முடியாதுஒரு தீபாவளி மதியம் திருச்சியில் இருந்து அருகில்

உள்ள என் அப்பாவின் ஊரான முததரசநல்லூர்

கிராமத்திற்கு சென்றே ஆக வேண்டும்

என்று சொன்னதால் மிகவும் கூட்டமான


"பேருந்தில் என்தாயார் மாட்டிக்கொள்ள நேர்ந்தது
"
பேருந்தை சுற்றி சுற்றி வந்து என் அம்மாச்சி
(அம்மாவின் அம்மா ) பட்ட தாய்மையின் தவிப்பை
கோழியுடன் ஒப்பிட்டு பேசுவார் என் தாய்


கவிஞர் கண்ணதாசன் பொல்லாதவன் திரைப்படத்திற்கு

எழுதிய "நான் பொல்லாதவன் " எனத்தொடங்கும்


பாடலில் இடம் பெற்ற

"வானத்தில் வல்லுரு வந்தாலே கோழிக்கு

வீரத்தை கண்டேனடி"

என்ற வரிகளின் உவமைநயத்திற்கு சற்றும்
குறைவுபடாத வரிகள் என் தாயாரின் வரிகள்

என்பதை பெருமை பொங்க கூறிக்கொள்ள விழைகிறேன்.

என்ன ஒரு வேறுபாடு கண்ணதாசனுக்கு எழுதும்

வாய்ப்பு கிடைத்தது.

என் தாயாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை


அந்த வார்த்தைகள் பின்வருமாறு:
பேருந்தை சுற்றி சுற்றி

எங்க அம்மா வந்தது பார்க்க

கோழி குஞ்சு உள்ள

மாட்டிக்கும் பொழுது

தாய் கோழி தவிப்போட பஞ்சாரத

சுற்றி சுற்றி

வருமே அது மாதிரி


இருந்துச்சு

சோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் -1

துக்ளக் பத்திரிக்கையின் கேள்வி பதில்

பகுதியில் இருந்து:கேள்வி: பெண்கள் முன்னேற்றம் என்றால்

ஏன் உங்களுக்கு பாகற்காயாக கசக்கிறது?

இதற்கு சோவின் ஆணாதிக்க


திமிர்பிடித்த பதில்

உங்கள் கூற்றை நான் மறுக்கிறேன்.


பாகற்காய் அல்ல, எட்டிக்காய்


Tuesday, August 20, 2013

சோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம்

சோ பெண்களை பற்றி மட்டம் தட்டி பேச்கூடிய நபர்.

நிறைய சான்றுகளை கூறலாம்.


"ஆணாதிக்கம் என்னிடம் உள்ள நல்ல பழகங்களில் ஒன்று " - சோ.ராமஸ்வாமி

இந்த மனிதர்தான் பார்லிமென்ட் கட்டிடத்தின் மேல்
பறக்கும் நம் தேசீய கொடியை நீக்கிவிட்டு


அதற்கு பதிலாக புடவையை வரைந்து கார்டூன் போட்டு
ஒரே நேரத்தில் பெண்களையும் நாட்டையும் அவமதித்த
ஆணாதிக்க வெறியன்.


மகளிர் இட ஒதிக்கீடு மசோதா விற்குத்தான்
சோவின் மேற் சொன்ன அட்டுழிய கார்டூன். .


இதை போலவே நிறைய சான்றுகளை கூறலாம்.

இந்த பதிவில் தொடர்ந்து கூற இருகிறேன்.

என் கவிதை


தெருவோரக்குரல்

மழைக்காலமும் பனிக்காலமும்
சுகமானவைதான்
வீட்டில் இருந்துகொண்டு
வசதியாக
வேடிக்கை பார்பவர்களுக்கு

தமிழ் ஈழம்

பாரதியார் எழுதிய கவிதை "சிங்கள தீவினர்கோர்
பாலம் அமைபோம்"


என்ற கவிதை சிங்கள இனத்திற்கு
ஒப்புதல் வாக்குமூலம் போல் இருக்கிறது

ஈழ தமிழர்கள் கேட்கும் தமிழ் ஈழத்திற்கு எதிர்நிலையில்
இந்த கவிதை இருக்கிறது என்பது என் கருத்து.

Monday, August 19, 2013

தெருவோரக்குரல்

தெருவோரக்குரல் மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவைதான் வீட்டில் இருந்துகொண்டு வசதியாக வேடிக்கை பார்பவர்களுக்கு

என் கேள்வி

பாரதியார் எழுதிய கவிதை சிங்கள தீவினர்கோர் பாலம் அமைபொஎஅம் என்ற கவிதை சிங்கள இனத்திற்கு ஒப்புதல் வாக்குமூலம் போல் இருக்கிறது ஈழ தமிழர்கள் கேட்கும் தமிழ் ஈழத்திற்கு எதிர்நிலையில் இந்த கவிதை இருக்கிறது என்பது என் கருத்து.

IRANKAL KAVITHAI

வாழிய நீ வாலி ஆழி சூழ் உலக மெல்லாம்! அருந்தமிழை அருந்த வைத்து! மேழியாம் எழுதுகோலால்! உள்ளங்களை உழுதவனே! கோழிகளும் குயில்களைப் போல்! கூவிப் பார்க்கும் கலியுகத்தில்! ஏழிசையால் ஏறி நின்ற! வாலியெனும் பாட்டரசே! ஊழித்தீ அணையுமட்டும்! உன்பாட்டு நிற்குமன்றோ! வாழிய நீ பாட்டுருவில்! வாழ்வாங்கு இத்தரையில்!

யாரோ எழுதிய கவிதை

கவிஞர் வாலி அவர்கள் காலமானபோது யாரோ ஒருவர் எழுதிய கவிதை

வாழிய நீ வாலி ஆழி சூழ் உலக மெல்லாம்! அருந்தமிழை அருந்த வைத்து!


 


மேழியாம் எழுதுகோலால்! உள்ளங்களை உழுதவனே!


 


கோழிகளும் குயில்களைப் போல்! கூவிப் பார்க்கும் கலியுகத்தில்! ஏழிசையால் ஏறி நின்ற!


 


வாலியெனும் பாட்டரசே! ஊழித்தீ அணையுமட்டும்! உன்பாட்டு நிற்குமன்றோ! வாழிய நீ


 


பாட்டுருவில்! வாழ்வாங்கு இத்தரையில்!


 

கவிஞர் வாலி
நாளை இந்த வேளை பார்த்து
ஓடி வா நிலா
இன்று எங்கள் கவிஞன் இல்லை
சென்று வா நிலா