Translate

Wednesday, September 25, 2013

படைபாளிகள் இயக்கம் சார்ந்து இயங்கலாமா?

படைபாளிகள் இயக்கம் சார்ந்து இயங்கலாமா?
என்ற விவாதம் நிகழ்ந்து கொண்டே வருகிறது.
இது குறித்து என் பார்வையை பதிவு செய்வதே
இந்த சிறு கட்டுரையின் நோக்கம்.


படைபாளிகள் தனித்தே இயங்க வேண்டும் என்பது
எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் கருத்து.


சுந்தர ராமசாமியின் மேற்கண்ட கருத்தை மறுக்கும்
ச.தமிழ்செல்வன் எந்த இயக்கத்தை
சாராமல் ஒரு படைப்பாளி இயங்கினாலும்
நகராட்சி , மாநகராட்சி போன்ற அரசமைப்பின்
கீழ் தானே வாழ்ந்து ஆக வேண்டும் என்கிறார்.


கவிஞர் மு.மேத்தா ஒரு நேர்காணலில்
ஒரு கவிஞன் ஒரு சமூக இயக்கத்தோடு தன்னை
ஒட்டி வைத்து கொள்ளலாம்.ஆனால் கட்டி வைத்து
கொள்ள கூடாது
என்கிறார்.

கவிஞரின் கருத்தும் ஏறக்குறைய சுந்தர ராமசாமியின்
கருத்தையே ஒத்து இருக்கிறது.


ஒரு படைப்பாளி குறிப்பிட இயக்கத்தின் கருத்துக்களால்
கவரப்பட்டு தன் படைப்புகளில் அவற்றை
பிரதி பலிப்பதோ மேற்கோள் காட்டுவதோ
தவறில்லை.

ஆனால் ஒரு இயக்கத்தின் முழுநேர பணியாளராக
மாறினால் தனித்தன்மையை இழக்க நேரிடும்.

ஒருவேளை விதிவிலக்காக ஒரு இயக்கத்தின்
முக்கிய பொறுப்பில் இருக்கும் போதே சுயமான
கருத்தையும் பேணி வரும் உரிமை இருக்குமானால்


அப்படி பணியாற்றுவதில் சிக்கலில்லை.

இந்த கூற்றுக்கு நடைமுறை உதாரணமாக
இருப்பவர் திரு.ரவிக்குமார் ஆவார்.

இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய
பொறுப்பில் இருப்பவர்.
இவருக்கும் கட்சி தலைவர் திரு.தொல்.திருமாவளவனுக்கும்
லட்சியம் ஒன்றே
என்றாலும் சிற்சில விசயங்களில் அதை அடையும்
வழிமுறைகளில் கருத்து வேறுபாடு உண்டு.


இந்த செய்தியை ஒரு நேர்காணலில் திரு .ரவிக்குமாரே
பதிவு செய்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட சிந்தனை சுதந்திரம் வி.சி. கட்சியில்
இருப்பது ஒரு தலித் விடுதலை இயக்கம் என்ற
வகையில் மிக மிக பொருத்தம் உடையதே.

No comments:

Post a Comment