Translate

Monday, June 4, 2018

பூமியின் ஆடை





தங்கள் உரிமைகளுக்காக போராடுபவர்களை ஆதரிக்காவிடினும் பரவாயில்லை ஒரு சிலர் அவர்களையே குறை கூற தொடங்கி உள்ளனர்.எதெற்கெடுத்தாலும் போராடினால் தமிழகம் சுடுகாடாகி விடுமாம்.

அப்படி எங்களை மொத்தமாய் முடித்தபின்பும்,

ஐயகோ! காருண்ய மூர்த்திகளே , கருணையின் சீலர்களே

அந்த சுடுகாட்டிலும் அல்லவா ஊழல் செய்து தொலைப்பீர்கள்!

அப்பொழுது எங்கள் ஆவிகள் வந்தா போராட்டடம் நடத்தும்?

ஒரு பக்கம் தாய்மார்களின் தாலி அறுக்கும் சாராய கடைகளை அடைக்க சொல்லி போராட்டம்.

மறுபுறம் காவிரியில் தமிழகத்தின் பங்கை கேட்டு போராட்டம்.

காவேரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க துடிக்கும் மீத்தேன் திட்டத்தை

எதிர்த்து போராட்டம்

 “காவேரியை கடக்க

இனி ஓடம் தேவையில்லை

ஒட்டகமே போதும்”.

தண்ணீர் வராத வெற்று மணல் வெளியான  காவேரியை பற்றி கவிஞர் தணிகை செல்வனின் மனக்குமுறல் அந்த கவிதை.

இப்பொழுது அந்த ஆற்று மணல் மொத்தத்தையும் அள்ளி முடித்தாகி விட்டது.

அடுத்து மலைகளை குடைந்து பண புதையலை அள்ள அடங்காத ஆவலுடன் கிளம்பிவிட்ட்டார்கள் அக்கிரமக்காரர்கள்.


  போராடாமல் எதையும் அடைய முடியாது.
உரிமைகளும் சுதந்திரமும் கிடைப்பது போராட்டத்தின் பயனே.
ஆதலால்தான்,
சுதந்திரத்தை பற்றி சொல்ல வந்த மகா கவி .பாரதியார் சொற்களை சுடவைத்துக்கொண்டு சொல்கிறார்:
"தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரை கண்ணீரால் காத்தோம்"

அக்கா வந்து கொடுக்க சுக்கா ? மிளகா ?
சுதந்திரம் கிளியே!
  • விடுதலையின் மாண்பை பாட வந்த புதுவைக்குயில் பாரதிதாசனின் கீதம் இது.
     

இந்த பூமி எதை ஆடையாக
அணிந்துள்ளது?


என்று தன் கவிதையில்
கேள்வித்தொடுக்கும் கவிஞர் மு.மேத்தா,
 
அலை நெளிகிற கடல்,  பூமி பெண்

கட்டும் சேலையின் அலங்கார சரிகைதான்.

எங்கு சுதந்திரம் இல்லையோ

அங்கெ பூமி நிர்வாணத்தால்

அவமதிக்க படுகிறது.

உடல் காற்றினை சுவாசிக்கலாம்

ஆனால்

உயிர் சுதந்திரத்தைத்தான் சுவாசிக்க முடியும்.

என்று பதில் தருகிறார்
 



No comments:

Post a Comment