Translate

Tuesday, December 17, 2019

தாஜ்மஹாலின் காதிலே ராமகாதை


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை
வியப்பில் ஆழ்த்திய கவிஞர் மு மேத்தா
          ***
தமிழ் மைந்தன் சரவணன்

ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்தஒரு படத்தின் தமிழ் வடிவம்தான் வேலைக்காரன் என்ற வெற்றி படம்.
இந்த திரைப்படத்தின் பாடல் பதிவுகளுக்கான இடங்களை தேர்வு செய்வதற்காக படத்தின் இயக்குனர் எஸ் பி முத்துராமன் அவர்களுடன் படத்தின் நாயகன் ரஜினிகாந்த்
சென்றபோது காதல் பாடலுக்கு தாஜ் மகாலில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த விஷயத்தை உடனடியாக இளையராஜா அவர்கள் மூலம் கவிஞர் கிட்ட சொல்லவேண்டும் என்று பரிதவித்துஇருக்கிறார் ரஜினிகாந்த்.
அந்த நாட்களில் இப்பொழுது உள்ளது போல் செல் போன் கள் இல்லை.
ஆதலால் தாஜ் மஹால் வளாகத்தில் இருந்து படப்பிடிப்பு குழுவினர் தங்கி இருந்த நட்சத்திர விடுதி வரை ரஜினிகாந்த் ஒரு பரிதவிப்பை முத்துராமன் அவர்களிடம் வெளிப்படுத்தியவண்ணம் இருந்துஇருக்கிறார்.
ஏன் என்றால் பாடல் பதிவு முடிந்துவிட்டால் மீண்டும் பதிவு செய்வது தயாரிப்பு செலவை கூட்டும் என்பதால் பெரும்பாலும் சாத்தியம் இல்லை.
ஆனால் எப்படியோ நட்சத்திர விடுதிக்கு சென்றவுடன் முத்துராமன் இளையராஜாவை தொடர்பு கொண்டு விசயத்தை சொல்லிவிட்டார்.
அந்த காதல் பாடலில் காதலின் உன்னத நினைவு சின்னமான தாஜ் மஹால் இடம்பெறவேண்டும் என்ற சூப்பர் ஸ்டாரின் ஆசை நிறைவேறியது.
சென்னை வந்தவுடன் இளையராஜாவை சந்தித்த ரஜினிகாந்த் பாடலை பற்றி கேட்டு இருக்கிறார்.
வா வா கண்ணா வா என தொடங்கும் அந்த பாடலை கேட்ட ரஜினிகாந்த் வியப்பின் உச்சிக்கே போய் விட்டார் .
காரணம்,
தாஜ்மஹாலின் காதிலே ராமகாதை கூறலாம்
மாறும் இந்த பூமியில்
மதங்கள் ஓன்று சேரலாம்
என்ற வரிகள்தான்.


காதல் பாடலில் காதலின் நினைவு சின்னம் என்ற அந்த தளத்தில்
தாஜ் மகாலை தொடர்பு படுத்தி எழுதுவார் என்றுதான் நினைத்தேன்.
தாஜ்மகாலை மையப்படுத்தி மதங்களையே ஒற்றுமை படுத்தி விட்டாரே என்று வியந்து இருக்கிறார்.
இந்த பாடலில் நான் வியக்கும் கவிதை நயம் என்னவென்றால்,
தாஜ்மகால் என்ற அந்த காதலின் வசந்த மாளிகை உயிர் அற்ற ஒரு கட்டடம் தான்.
ஆனால் அதற்குள் ஒரு உயிர்ப்பை கண்டு அதன் காதிலே ராமகாதை கூறும்  மு மேத்தாவின் கவிதை வித்தகம் வியக்க செய்தது.
 

No comments:

Post a Comment