Translate

Thursday, October 18, 2018

புதையல் பதிவின் தொடர்ச்சி



நான் 1980 மற்றும் 1986 க்கு இடைப்பட்ட வருடங்களில் மணப்பாறையில் உள்ள புனித மரி அன்னை துவக்க பள்ளியில் படித்து கொண்டிருந்த காலமது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiErL-rv8PKypGfxVPP6kzcjO6Us8IaULeJZ7ZjCGCyoR3DeLT9b2bmo6COvhC_cO7wD7FsgXJPmAmNB3gsQeuls603NHlut7qHzFQ45RpUHaxzjdKjhG_zc56AKZ70MXdaWPxZ_F0/s640/1.jpg


 


 


பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்காக ஆசிரியை ஒருவர் திரைப்பாடல் மெட்டில் எழுதிய பாடல்கள் இரண்டு.


 


ஓன்று இந்திய சுதந்திர போராட்டத்தை குறிப்பது.


 


மற்றொன்று இயேசு நாதரை வணங்கி பாடும் பக்தி பாடல்.


 


அந்த நோட்டை பல வருடங்கள் பாதுகாத்து வைத்திருந்தேன்.


 


தற்போது என் கண்களுக்கு தட்டுப்படவில்லை. 


 


அந்த நோட்டை நான் கண்டெடுக்கும் வரையில் என்  நினைவில்


உள்ள வரிகளையே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4uhv5IHQrHx1ZUp5RZyhYRW7pHm4o21EZUzJFMvPtfVN0AAbPPIKYTlujuObqRuLS6-AHYrELuuI5EMUqQCXzghXyoRG7MjFWDeySV0dVpWJfcMgxAMBmeVbz1710EDBJzFKOKZ6y/s640/2.jpg


 


கவிஞர் மனுஸ்ய புத்திரனை ஒரு இஸ்லாமியர் என்று முத்திரை குத்தி அவரது கவிதை பணியை கொச்சை படுத்தும் இத்தருணத்தில்,


இந்த பாடல்களை எழுதிய ஆசிரியையின் பெயர் நூர்ஜஹான் என்ற தகவலை தெரிவிப்பதன் மூலம் இஸ்லாமியர்கள், சமூகத்தின் அனைத்து வகுப்பினரிடமும் நல்லிணக்கத்தை பேணவே விரும்புகின்றனர் என்ற செய்தியை இந்த சமூகத்திற்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.


மேலும் இஸ்லாமிய சமூகத்தின் தேச பக்தி மறக்க பட்டதல்ல . அது திட்டமிட்டே மறைக்க பட்டது என்பதும் உறுதி.


அந்த பாடல்கள்  ...


 


(அடி என்னடி ராக்கம்மா  (பட்டிக்காடா பட்டணமா) திரைப்பாடல் மெட்டு)


சொல்லடா தம்பி நம் பண்பாட்டு பெருமை


இந்நாளில் மயங்கியது


நம் முன்னோரின் சீரற்ற வேற்றுமை மயக்கம்


நம் தேசம் கலங்கியது


வந்தானே வெள்ளையன் கையேந்தி அந்த வரவுக்கு


இடம்தந்தது.


 


 


(வாழும் வரை போராடு (பாடும் வானம்பாடி) திரைப்பாடல் மெட்டு)


 


அன்பின் இறைவா போற்றி வாழ்த்தி வணங்கிடுவோமே


((((((தற்போது என் கண்களுக்கு தட்டுப்படவில்லை. 


 


அந்த நோட்டை நான் கண்டெடுக்கும் வரையில் என்  நினைவில்


உள்ள வரிகளையே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.))))


அண்மையில் என் சொந்த ஊரான மண்ணச்சநல்லுருக்கு சென்ற போது  நான் பாதுகாத்து வைத்திருந்த என் ஆரம்பப்பள்ளி நாட்களின் குறிப்பேட்டை கண்டு அடைந்தேன் .


அதன் SCANNED COPY மற்றும் கணிப்பொறி உதவியுடன் எழுதப்பட்ட பிரதியையும் இணைத்துள்ளேன்


“அடி என்னடி ராக்கம்மா” திரைப்பாடல் மெட்டு  
பல்லவி
சொல்லடா தம்பி நம் பண்பாடு பெருமை
எந்நாளில் உறங்கியது
நம் முன்னோரின் சீரற்ற வேற்றுமை மயக்கம்
நம் தேசம் கலங்கியது
(சொல்லடா)
சரணம்-1
வந்தானே வெள்ளையன் கையேந்தி
அந்த வரவுக்கு இடம் தந்தது
சொல்லாமலே நம் முன்னோரை (நம் சோதரரை) பிரித்து வைத்து
பெரும் சூழ்ச்சியில் வீழ்த்தியது
நம்மோடு நம் மோதி நமக்கழிவை
தந்து துண்டாக்கி சிதறியது
நம் மானம் நம்ரோசம் நம்வீரம்
அது எல்லாமே மண் மூடித்தூங்கியது
(சொல்லடா)
சரணம்-2
அண்ணல் நம் காந்தியாம் தேசப்பிதா
அவர் அகிம்சை வழி வந்தது
ஒன்றாகி எல்லோரும் ஓர் குரலில்
சுதந்திரம் வேண்டியது
நாடெங்கும் ஒன்றாகி வீறு கொண்டார்
நம் மாவீரம் ஓங்கியது
அந்நேரம் எந்நாளும் எல்லோரும்
நம் நாடெங்கும் போராட்டம் துவங்கியது
(சொல்லடா)
சரணம்-3
பல்வேறு தியாகங்கள் பல செய்தார்
நம் அடிமை தளை வீழ்ந்தது
மூவண்ண  தாய் மணிக்கொடி  ஏந்தி
நம் சுதந்திரம் வாங்கியது
இந்நாளில்தான் கைக்கொட்டி வாழ்த்திடுவோம்
நல் உறுதியும் தான் வந்தது
திக்கெட்டும் தேன்கொட்டும் பரவட்டும்
நம் சந்தோசம்
இந்நாளில் பெருகியது
 
 

 
 “வாழும் வரை போராடு” எனத்தொடங்கும் “பாடும் வானம்பாடி”
என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்
இறை வணக்க பாடல்
பல்லவி
அன்பின் இறைவா போற்றி
வாழ்த்தி வணங்கிடுவோமே
எந்நாளுமே நம் வாழ்விலே
உம்மை போற்றி துதித்திடுவோம்
(அன்பின்)
சரணம்-1
காரிருள் நீங்கும் காலை பொழுதே
உம்மை வணங்கிடுவோம்
நல்லோர் மனதில் கோவில் கொண்டாய்
இறைவா போற்றிடுவோம்
இறைவா நீர்
அருள் தாரும்
எந்நாளும் வாழ்த்துவோம்
 
 
 
(அன்பின்)
சரணம்-2
உந்தன் வரவால் எங்கள் வாழ்வு
என்றும் மலர்ந்திடவே
தீமைகள் நீங்கி நன்மைகள் பெற்று
என்றும் வாழ்ந்திடவே
இறைவா நீர்
அருள் தாரும்
எந்நாளும் வாழ்த்துவோம்
போற்றுவோம்
 
 
 


No comments:

Post a Comment