Translate

Thursday, August 9, 2018

சுகிர்தராணி


                                                                 கவிஞர் சுகிர்தராணி

வினவிற்கு மறுமொழி -2

கவிஞர் சுகிர்தராணியின் குரல் யாரை நோக்கி நீள்கிறது என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
பெரியார் இயக்க தோழர்களின் வீட்டு அம்மாக்களை சுகிர்தராணி கண்டிப்பாக குறிப்பிடவில்லை என்பது உறுதி.
ஒருவேளை அப்படி வலிந்து பொருள் கொண்டாலும்,
“சேரிக்குள் வந்த ஊர் முதல் படி .
ஊருக்குள் சேரியும் நுழையவேண்டும் என்பது போராட்டத்தின் இரண்டாவது படி .
அதற்கும் தலித் இயக்கங்களுக்கு பெரியாரிஸ்டுகள் மற்றும் பொதுவுடைமை
இயக்கங்கள் துணை நிற்கவேண்டும்.”
என்ற ரீதியில் கவிதையை அமைத்து இருந்தால் சிறப்பாகவும் ,ஆக்கபூர்வமாகவும் அமைந்து இருக்கும்.
என்ற விமரிசனத்தை வேண்டுமானால் சுகிர்தராணி மீது வைக்கலாம்.
இந்த இடத்தில் மேலும் ஒரு செய்தியை பதிவு செய்வது காலம் எனக்கு இட்ட கடமையாக கருதுகிறேன்.
பாரதியார் ஒரு தலித்துக்கு அந்நாளில் பூணூல் அணிய செய்த செயலை
பாராட்டி “வர்ணாசிரமத்தின் தாலி அறுக்கப்பட்டது ” என்று கவிஞர் அப்துல் ரகுமான் எழுதிய கவிதைக்கு மறுப்பு சொல்லி,
“வர்ணாசிரமத்திற்கு அறுபதாம் கல்யாணம் நடந்தது ”
என்றுதான் பாரதியின் செயலை வர்ணிக்க முடியும் என்று என் கட்டுரை
(http://saravananmetha.blogspot.com/2018/05/blog-post_14.html)ஒன்றில் பதிவு செய்துள்ளேன்.

No comments:

Post a Comment