சோபியா!
உன்
முழக்கம்
இருள் கவிந்த வெளியில்
திடுமென
பளிச்சென்று
வெளிப்பட்ட
தீப்பொறி
ஒரு
எரிமலை
கொதித்து
வெளி கிளம்ப போவதன்
அறிகுறி
உன் முழக்கம்
வெறும் வார்த்தைகளின் குவியல்
அல்ல
ஆதிக்கத்தின் கரங்கள்
அன்று
தூத்துக்குடியில்
தூக்கி பிடித்த
துப்பாக்கி சனியன்களில் இருந்து
வெளிப்பட்ட
ரவைகளுக்கு
எதிராக
இப்பொழுது
விர்ரென்று
சீறிய
நியூட்டனின்
மூன்றாம் விதி
மாட்டு கறியை முன்னிறுத்தி
மனிதக்கறி
கேட்டு
பல்லிளித்த
பாசிசங்கள்
ஒற்றை பண மதிப்பு இழப்பு உத்தரவால்
ஓட்டு மொத்த தேசத்தையே
தெருவில் இழுத்துவிட்ட கொடூரங்கள்
தலித்துகளும் முஸ்லீம்களும்
இந்த மண்ணில் தொடரந்து
மதவெறிக்கு
பலியிடப்படும் கொடுங்கோன்மை கள்
இவற்றையெல்லாம் இவற்றையெல்லாம்
நீதிதேவதை
கண்டிருந்தால்
நீதிதேவதை என்
றொருத்தி
உண்மையென்றால்
அவள் கண்களில் இருந்து
ஒரு ஜீவநதியே புறப்பட்டு இருக்கும்
இமயத்தையே
சிறு கல்லென புரட்டி போட்டு இருக்கும்
எனில்
உன்னில்
இருந்து
உயிர்
பெற்ற சொற்கள்
சட்டத்திற்கு
புறம்பாவது எப்படி?
தர்மத்திற்கு
தீங்காவது எங்கனம் ?
No comments:
Post a Comment