Translate

Friday, September 7, 2018

மலை முகட்டில் இருந்து வழியும் அருவி


ஹைக்கூ கவிதைகள் சில .   .   .



மலை முகட்டில் இருந்து வழியும்
அருவியின் சலசலப்பை ஒட்டு கேட்பவை
அடிவாரத்தில் மறைந்து நிற்கும் மலர்ச்செடிகள்



 போரால் சிதிலமடைந்த வீட்டில் இருந்து
வெளியுலகை ஏக்கமாய் பார்க்கும் கண்கள்
அந்த ஜன்னல்கள்



 அந்த மாநகரின் சாலை சந்திப்பு
சிக்னலை மட்டுமே வெறித்துக்கொண்டிருந்தோரில்
ஒருவர்கூட பார்க்கவில்லை வானவில்லை



 ஆள் அரவமற்ற பேருந்து நிலையம்
ஊளையிடும் ஒற்றை நாய்
பழைய நினைவுகளோடு அவன்



தொடர் வண்டி நிலைய எதிர் நடைமேடையில்
கல்லூரி கால நண்பன்
கூப்பிட வாய்திறந்தபோது தட தடத்து சென்றது ரயில்



 எனக்கு அறிமுகம் இல்லாத அந்தச்சிறுமி
பெயர் அறியா இந்த மலர்களை
பறிப்பது யாருக்காக



 பக்கத்து அறையில் இருந்து
பழைய மின்விசிறி சுழலும் ஓசை
உன் நினைவு
 
 
 








No comments:

Post a Comment