Translate

Thursday, November 7, 2013

வெண்ணிலவின் கண்ணீர்

வெண்ணிலவின் கண்ணீர் என்ற தலைபிட்ட கவிக்கோ. அப்துல் ரகுமானின் கவிதையை வாசித்தபோது எனக்கு சில சிந்தனைகள் உதித்தது.அவற்றை பகிர்ந்துகொள்ளவே இந்த சிறு பதிவு.


என் அணைப்பை விட்டே
இனி சிறிது என் செல்வத்தை
உன் அணைப்பில் ஏந்தென்று
உறக்கத்தைத் தாய்ழைக்கும்
தாலாட்டு பாட்டினிலே

என்ற அந்த கவிதையில்,கவிஞர் அன்னையின் அரவணைப்பிற்கு
ஈடாக கூறியுள்ள உறக்கத்தை தாண்டியும் நம் சிந்தனை விரிகிறது.

அன்னையின் அரவணைப்பிற்கு ஈடாக உறக்கம் மட்டும்தான் இருக்க வேண்டுமா?

தாலாட்டு பாடல் இருக்க கூடாதா?
என்ற சிந்தனை கவிதையை வேறு விதமாகவும் அமைக்க நம்மை தூண்டுகிறது.
என் அணைப்பை விட்டே
இனி சிறிது என் செல்வத்தை
உன் அணைப்பில் ஏந்தென்று
தாய்ழைக்கும் தாலாட்டு பாட்டினிலே

அல்லது

என் அணைப்பை விட்டே
இனி சிறிது என் செல்வத்தை
உன் அணைப்பில் ஏந்தென்று
தாய்பாடும் தாலாட்டு பாட்டினிலே

என்று கவிதை அமைந்து இருந்தாலும் இதே சிறப்புடனே இருந்திருக்கும்.

-இன்னும் கொஞ்சம் வார்த்தை சிக்கனதுடனும் மற்றும் செறிவாகவும்
தாலாட்டு பாடுவதின் நோக்கமே குழந்தையை உறங்க வைப்பதுதான் உறக்கம் குழந்தையை அமைதியாக வைத்திருக்கும் அதனால்தான் தாலாட்டை சொல்லாமல் உறக்கத்தை கவிகோ.அப்துல் ரஹ்மான் குறிபபிடுகிறார் என்று யாரேனும் வாதாட வாய்ப்புண்டு.


ஆனால் அப்படியும் ஒரு முடிவுக்கு வர முடியாது.கவிஞர் மு.மேத்தா எழுதிய "தாலாட்டுகள் ஓய்வதில்லை" என்ற சிறுகதையில் தாயும் மகனும் வாதிட்டுகொளவதை போன்ற சுழல் வரும்.
அதை இங்கு குறிப்பிடுவது பொருத்தம் என்பதால் குறிப்பிடுகிறேன்.

தன் குழந்தைக்கு,

இந்திரனார் சேதி வரும்
மந்திரிமார் ஓலை வரும்
அப்போது உறக்கம் இல்லை
இப்போதே கண் உறங்கு

என்று தாலாட்டு பாடும்
தன் தாயை பார்த்து போதும்
நிறுத்தும்மா எனக்கும் இதே பாட்டைதானே பாடினே
எவ்வளவு துன்பத்திலும் வறுமையிலும் சிக்கி தவிக்கிறேன்.
என்று ஆதங்க படும் மகனை பார்த்து

அட போடா நான் பாடுன தாலாட்டு மாதிரி நீ
வாழ முடியாம போனது என் குத்தம் இல்லடா.

உனக்கு நான் பாடுன தாலாட்டு எங்கம்மா எனக்கு பாடினது
அதுக்கு முந்தின தலைமுறையில் என் பாட்டி பாடினது

இதெல்லாம் குழந்தையை பற்றிய தாய்மார்களின் ஆசைகள்,கனவுகள்
அவைகள் நிறைவேறவில்லை என்பதற்காக கனவே காணகூடாதுணா எப்புடி
என்று சொல்வதாக வருகிறது

இதில் இருந்து ஒன்று புலனாகிறது.

தாலாட்டு பாடலின் உள்ளடக்கம் யாவும் தாயின் ஆசைகள் மற்றும் கனவுகள்
இது எந்த வகையிலும் குழந்தையின் சிந்தனையை
கிளறி அமைதிக்கு ஊறு விளைவிக்காது.

உறக்கத்தை போலவே தாலாட்டு பாடலும் குழந்தைக்கு
அன்னையின் அரவணைப்புக்கு நிகரான அரவணைப்பாய்
இருக்க கூடியது.

எனவே இந்த கவிதை இப்படி அமைந்திருந்தால்
என்ற சிந்தனை பொருத்தம் உடையதே.

No comments:

Post a Comment