Translate
Thursday, July 17, 2014
எரிமலையில் ஒரு குளிர் அருவி
தமிழ் ஈழ போராட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
உலகம் எங்கும் விரவியுள்ள தமிழீழ மக்கள் அப்போராட்டத்தை
சர்வ தேச சமூகத்தின் கரங்களை நோக்கி தொடர்ந்து நகர்தியவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் நின்று கொண்டு பின்னோக்கி பார்க்கையில்
சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு திடமான
ஆயுத போராட்டத்தை நடத்திய புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் என்ற
மாபெரும் தலைவனை பற்றிய சிந்தனை தவிர்க்க முடியாதது
நெருப்பு முனையில் நின்று கொண்டு கடும் போரட்டத்திற்கு நடுவிலும் அவர்
வாழ்கையில் நகைச்சுவை உணர்வை எப்படி காப்பற்றி வந்தார் என்பது எனக்கு பெரும் வியப்பே.
அதற்கு சான்றாக ஒரு நிகழ்வு.
ஒருமுறை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அன்பிற்குரிய அண்ணன் திருமாவளவன்
அவர்கள் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சந்திக்க சென்ற போது ஒரு விருந்திற்கு
ஏற்பாடு செய்துள்ளார். அப்பொழுது விருந்து பரிமாறுபவரை திருமாவிற்கு கோழி இறைச்சி
பரிமாற கூறியுள்ளார்.
இதை கேட்ட திருமா ,
அண்ணா ! நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று கூறியுள்ளார்.
திருமாவின் இந்த வார்த்தைகளை கேட்ட பிரபாகரன்,
ஒ! இது சைவ சிறுத்தையோ? என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.
சிங்கள இன வெறி என்னும் நெருப்பு வளையத்தில் நின்று போராடிகொண்டிருந்த வேளையிலும்
அவரின் நகைச்சுவை உணர்வு என்னை மலைக்க வைத்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment