Translate

Wednesday, August 20, 2014

காத்து வீசுது


இயக்குனர்மனோபாலா"மனதோடு மனோ" நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன்பு
பேசும்போது 
கவிஞர் மு.மேத்தாவை திரை உலகிற்கு அறிமுகம் செய்தது தான்தான் என்று கூறினார்.
அவர் கூறிய தகவல் தவறானது.
கவிஞரின் கல்லூரி கால நண்பர் உ.சுப்ரமணியனின் தந்தையர்
நாடக உலகின் சக்ரவர்த்தி என்று புகழப்பட்ட உடையப்பா

தயாரித்த அனிச்ச மலர் என்ற படத்தின் மூலமே திரை  உலகிற்கு வந்தார்


அதன் பின்பே மனோபாலா இயக்கிய ஆகாய கங்கை படத்தில்
இசைஞானி இசையில் பாடல் ( தேனருவில் நனைந்திடும் மலரோ)
எழுதினார்
அதுவும் பாலகுமாரன் மூலமாக கமல் ஹாசனை சந்தித்து பின்பு 
இசைஞானியின்  அறிமுகம் கிடைத்ததாக கவிஞரே 
தன் நேர்காணல்களின் தொகுப்பு நூலில் (இதய வாசல் , திறந்த புத்தகம்)
 
குறிபிடுகிறார்.
கவிஞர் மு. மேத்தா தன் முதல் திரைபட பாடல் அனுபவத்தை பற்றி 
கூறும் போது,



என் கல்லூரி கால நண்பர் உ. சுப்ரமணியன் தன் தந்தை திரைப்படம்
தயாரிப்பதாகவும் அதில் நீங்கள் பாடல் எழுத வேண்டும் என்று 
அவர் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
எனக்காக காத்திருந்து பின்பு தன் காரில் அழைத்து சென்றார்.
அந்த கார் ஒரு பட நிறுவனத்தின் வாசலில் போய் நின்றது.
.
அங்கே எனக்கு ஒரு பெரிய ரோஜா பூ மாலையை கழுத்தில் போட்டு,
இவர்தான் நம் கவிஞர் என்று சங்கீத இரட்டையர்கள் சங்கர் -கணேஷ்
அவர்களிடம் என்னை அறிமுகம் செய்தார் உடையப்பா என்கின்ற அந்த 
உன்னதமான மனிதர் 



என்று கவிஞர் மு.மேத்தா நன்றி பெருக்கோடு நினைவுகூறுகிறார்.
மனோபாலா விபரம் அறியாமல் கூறி இருந்தாலும்,
இது ஒன்றும் இமாலய தவறு இல்லை என்றாலும்,
கவிஞர் மு.மேத்தாவின் நன்றி உணர்வையும், உடையப்பா அவர்கள் கவிஞரின் 
மீது கொண்டிருந்த பற்றுதலையும், அன்பையும் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்
என்ற ஆவலின் காரணமாகவே இந்த உண்மைகளை பதிவு செய்கிறேன்.
காத்து வீசுது
ஹே காத்து வீசுது 
வயல் வெளியில் நெற்கதிரும்
காதல் பேசுது
செல்லமா பொன்னம்மா 
உன் மேல ஆசை வந்ததம்மா 
என்பதே அந்த பாடலின் 
ஆரம்ப வரிகள்.
பாடலை பாடியவர்கள் 
வாணி ஜெயராம் ; மலேசிய வாசுதேவன்

No comments:

Post a Comment