ஒரு வருத்தம்அகத்தியன் அவர்கள் இயக்கிய காதல் கவிதை |
படத்தில் நாயகனும் நாயகியும் பேசிக்கொள்ளும் |
ஓர் உரையாடல் |
பிரசாந்தை பார்த்து இஷா கோபிகர் |
சொல்கிறார் |
அன்பே! அன்பே ! அப்பிடீன்னு உருகுகிற ஆண்பிள்ளையை கூட |
நம்பிடலாம். |
ஆனா அம்மா ! அம்மா! அப்பிடீன்னு சொல்லறானே அவன்களை |
நம்பவே கூடாது. |
என்னைமிகவும் காயபடுத்திய வசனம். |
அம்மா என்ற உறவுநிலையில் |
ஒரு இளம்பெண்ணை நினைத்து போற்றுகின்ற |
மனிதன் எனக்குள்ளும் |
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். |
என்னை விட்டுத்தள்ளுங்கள். |
தன் மனைவியின் உருவிலே அன்னை அபிராமியே |
தரிசித்த அபிராம பட்டரையோ, |
எல்லா உயிர்களிலும் இறைவன் உறைந்துள்ளான் |
என்றால் மனைவியும் தெய்வம்தானே |
என்று சிந்தித்த மகா கவி பாரதியையோ |
அந்த வசனத்தை கொண்டு எங்கனம் |
அளப்பது? |
அந்த வகையில் அகத்தியன் அவர்களிடம் |
என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். |
Translate
Tuesday, January 27, 2015
இயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு 2
Labels:
இஷா கோபிகர்,
பிரசாந்த்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment