ஒவ்வொரு பத்து வருடத்தையும் |
வாழ்க்கை கடக்கும் தருணங்களை |
மலை பயணத்தின் |
கொண்டை ஊசி வளைவுகளின் |
திருப்பங்களாக |
உணரும் வேளையில் . . . |
இருளில் இருந்து |
தீடீரென்று வெளிப்படும் |
வழிபறிகாரனைப போல் |
எழும் ஒரு கேள்வி : |
வாழ்க்கை என்பது |
மலை மீது ஏறுவதா |
மலையில் இருந்து இறங்குவதா |
No comments:
Post a Comment