Translate

Wednesday, September 26, 2018

உன் கண்களின் வெளிச்சத்தில்மெல்லிசை மன்னர் எம் .எஸ் .வி யின் இசை வண்ணத்தில்

புதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தாவின் கவிதை நயத்தில்

“இசைத்தேன் இசைத்தேன்” தனி இசை தொகுப்பில் இடம்பெற்ற பாடல்


பாடியவர்கள் : எஸ் .பி .பி  & சித்ரா

ஆண் :           உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்

                       உன் காதலின்  தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்

 

பெண்:           உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்

                       உன் காதலின்  தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்

 

ஆண் :           அங்கம்  எங்கும் …    ஆசை முழங்கும் அரசாங்கம்

பெண்:            அங்கம்  எங்கும் …    ஆசை முழங்கும் அரசாங்கம்

 

ஆண் :           வெள்ளி நிலா  செல்லும்  உலா

                       வெள்ளி நிலா  செல்லும்  உலா   

                       உன் விரல்களின் மோதிரம் அன்பே

பெண்:           பூவணியும் தாவணியும்

                       பூவணியும் தாவணியும்

                       உன் பூமியில் ஊர்வலம் இங்கே

 

ஆண் :           அங்கம்  எங்கும்     ஆசை முழங்கும் அரசாங்கம்

பெண்:            அங்கம்  எங்கும்     ஆசை முழங்கும் அரசாங்கம்

ஆண் :           உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்

பெண்:            உன் காதலின்  தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்

 

 

ஆண் :           புத்தம்புது முத்துரதம்

                        புத்தம்புது முத்துரதம்

                       உன் புன்னகை வீதியில் ஓடும்

பெண்:           சொத்து சுகம் அத்தனையும்

                       சொத்து சுகம் அத்தனையும் 

                       உன் பத்து விரல்களை தேடும்

 

ஆண் :           அங்கம்  எங்கும்      ஆசை முழங்கும் அரசாங்கம்

பெண்:            அங்கம்  எங்கும்     ஆசை முழங்கும் அரசாங்கம்

 

ஆண் :           துள்ளி வரும் பிள்ளை தமிழ்

                                துள்ளி வரும் பிள்ளை தமிழ்

                                 உன் தோள்களில் பைங்கிளி போல

பெண்:             உள்ளம் எனும் தாமரை பூ  

                         உள்ளம் எனும் தாமரை பூ

                         உன் நியாபக அலைகளின் மேலே

ஆண் :           அங்கம்  எங்கும்    ஆசை முழங்கும் அரசாங்கம்

பெண்:            அங்கம்  எங்கும்    ஆசை முழங்கும் அரசாங்கம்

 

ஆண் & பெண் :           உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்
ஆண் & பெண்:            உன் காதலின்  தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்

 


Friday, September 21, 2018

கடற்கரை மணல்வெளி


ஹைக்கூ கவிதைகள் சில .   .   .


 

கடற்கரை மணல்வெளி

தலைவனின் சமாதியின் மேல்

வட்டமிடும் பறவைகள் கூட்டம்

 

உலர்ந்த சருகை ஏந்தி

அந்த பறவை பறக்கும் வேளை

எரிந்து முடிந்த சாம்பலாக அவள்

 

தமிழீழ மாவீரர்கள் துயிலும் இல்லத்தை

கூகிள் வரைபடத்தில் தேடித்தேடி ஓய்கின்றன

அந்த கண்கள்

 

முறிந்த பனை மரங்களை

வெறித்து பார்க்கின்றன

தாயகம் திரும்பிய அகதியின் கண்கள்

Friday, September 7, 2018

மலை முகட்டில் இருந்து வழியும் அருவி


ஹைக்கூ கவிதைகள் சில .   .   .மலை முகட்டில் இருந்து வழியும்
அருவியின் சலசலப்பை ஒட்டு கேட்பவை
அடிவாரத்தில் மறைந்து நிற்கும் மலர்ச்செடிகள் போரால் சிதிலமடைந்த வீட்டில் இருந்து
வெளியுலகை ஏக்கமாய் பார்க்கும் கண்கள்
அந்த ஜன்னல்கள் அந்த மாநகரின் சாலை சந்திப்பு
சிக்னலை மட்டுமே வெறித்துக்கொண்டிருந்தோரில்
ஒருவர்கூட பார்க்கவில்லை வானவில்லை ஆள் அரவமற்ற பேருந்து நிலையம்
ஊளையிடும் ஒற்றை நாய்
பழைய நினைவுகளோடு அவன்தொடர் வண்டி நிலைய எதிர் நடைமேடையில்
கல்லூரி கால நண்பன்
கூப்பிட வாய்திறந்தபோது தட தடத்து சென்றது ரயில் எனக்கு அறிமுகம் இல்லாத அந்தச்சிறுமி
பெயர் அறியா இந்த மலர்களை
பறிப்பது யாருக்காக பக்கத்து அறையில் இருந்து
பழைய மின்விசிறி சுழலும் ஓசை
உன் நினைவு
 
 
 
Wednesday, September 5, 2018

நீயும் நானும்


மதவெறியர்களால் கொல்லப்பட்ட தபோல்கர், பன்சாரே, கவுரிலங்கேஷ், கல்புர்கி

யாரங்கே?                            

அவனை நெடுநேரம்

காக்க வைக்காதீர்கள்

உடனடியாக அவனை

உள்ளே அனுப்புங்கள்

பேசி அனுப்பிவிடுகிறேன்

விரைவாக . . .

 

தபோல்கர் . . . 

பன்சாரே . . .

கவுரிலங்கேஷ். . .

கல்புர்கி . . .

என்று 

என்  மரணவேட்டை 

தொடர்வதாக

நீ

கூப்பாடு போடாதே

 

இந்த இந்திய திருநாட்டின்

மூலை முடுக்குகள் எங்கும்

இஸ்லாமியர்களும் தலித்துகளும்

கொல்லப்படுவதையும்

கொடூரமாக தாக்க படுவதையும்

கண்டு அந்த கனிந்த மனம்

படைத்தவர்கள் கலங்கிடலாமா ?

 

ஆதலால்

அவர்கள் மீது

என் கருணை பார்வை பட்டதை

நீ ஏன் ஏற்று கொள்ளாமல்

சண்டை செய்கிறாய் ?

 

நீ என்னை காண

உள்ளே வரும் போது

வாசலில் நீதியும் தர்மமும்

கூனிக்குறுகி நின்றதை

பார்த்தாய் அல்லவா?

 

நான்  இன்னும்

நிறைய செயல் திட்டம்

வைத்துளேன்

 

இதற்கே

நீ

தூக்கத்தில் இருந்து

தீடீரென்று  விழித்துக்கொண்ட

குழந்தை போல்

வீறிட்டு அழுகிறாயே?

 

பிழைக்க கற்றுக்கொள்

அதட்டுகிற

அதிகாரத்தின் குரலுக்கு

அடிபணிந்து

நடக்க கற்றுக்கொள்

 

அங்கேபார்

வாலாட்டுகிற நாய்களையும்

அவைகள்

கவ்விக்கொண்டு போகிற

எலும்புத்துண்டுகளையும்

 

இவைகளை போன்ற

இரண்டு கால் நாய்களை

எங்கேயும் நீ மிக

சுலபமாக காணலாம்.

 

கலை இலக்கிய மற்றும்

அரசியல் உலகத்தில். . .

ஏன் நீ இப்பொழுது

நடந்து வந்த நடுத்தெருவில் கூட

 

இல்லை இல்லை

நான் போராடித்தான் தீருவேன்

என்று வீம்பு செய்கிறாயா?

 

நீ போராடு

நான்  தடையேதும் செய்யவில்லை

 

மனசாட்சியை தூக்கி எறியும்

போராட்டத்தில் இருந்து

உன் புரட்சிகர வாழ்வை

தொடங்கு

 

அதில் நீ

தோற்றால் கலங்கிடாதே

மனச்சாட்சியை கூப்பிட்டு

கலவரையறையற்ற

வேலைநிறுத்தத்தை தொடங்கிடுக

என்று கட்டளையிடு

 

புரட்சிக்கு

புது முகவரி தீட்டும்

என் போன்ற

விற்பன்னர்களை வியந்தோது

 

அப்புறம்

உன் பெயர் கூட ஏதோ சொன்னாயே ?

ம்! நினைவுக்கு வந்துவிட்டது

 

அப்பாவி இந்திய குடிமகன்

 

என்ன சரிதானே  ?

 

உன்னை பார்த்தால்

எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வருகிறது

 

எங்கே கிளம்பிவிட்டாய்?

 

ஒரு நிமிடம் நில்

என் பெயரையும்  கேட்டுவிட்டு

பிறகு போ

 
என் பெயர்தான்  மதவெறி