உலை தகிப்பாய்
உடலை பதம் பார்க்கும்
உச்சி வெய்யில்
கட்சி ஊர்வலத்தில்
கடைக்கோடியில் வந்தவன்
ஓரமாய் ஒதுங்கி
வேடிக்கை பார்த்தவனை
நோக்கி வினா தொடுத்தான்:
அய்யா!
நீங்கள் வலது சாரியா?
அல்லது இடது சாரியா?
கேள்வியால் கிறுகிறுத்து
போனவன்
பரிதாபமாக பதில் சொன்னான்
:
ஒன்றும் புரியவில்லையே!
நான் ஒரு பாதசாரி.