Translate

Showing posts with label கவிஞர் மு .மேத்தா. Show all posts
Showing posts with label கவிஞர் மு .மேத்தா. Show all posts

Friday, December 27, 2019

பிறை நிலவும் பிள்ளை தமிழும்




என்னோடு பணியாற்றும்
ஒரு இஸ்லாமிய சகோதரன் கேட்கிறான்
நாங்கள் யாருக்கு என்ன தீங்கிழைத்தோம்?

 எதன் பொருட்டு வெறுக்கப்படுகிறோம்

எதனால் ஒதுக்க படுகிறோம் ?

என்ன பதிலை நான் சொல்வது


உயர்த்தி பிடிப்போம் வள்ளலாரின்
அன்பு நெறியை
மாயட்டும் மறையட்டும்
மதவெறி
இந்த மண்ணை விட்டு 
சிலரின் மனதை விட்டு 

அன்பை வைத்து
நீ ஒரு தொட்டில் கட்டு
மனிதகுலம் நித்திரை கொள்ளட்டும்
அமைதி பெற்று
உயிர் போகும் பொழுது
மதம் பார்ப்பவர் உண்டோ
என் மதத்தவர்தான் மருத்துவராய்
வர வேண்டும் என்று அடம் பிடிப்பவர் உண்டா

இசை ஞானி இளைய ராஜா தன்னை
 ஈன்றெடுத்த அன்னை 
சின்னதாயீ அம்மை
தன் மகனின் நண்பன்
கவிஞர் முகமது மேத்தாவின்
நெற்றியிலே 
இட்டார் திரு நீறு

பிறை நிலவை போலல்லவா
அது எனக்கு காட்சி அளிக்கிறது
மத நல் இணக்கத்திற்கு
ஒடி வந்து சாட்சி அளிக்கிறது

உயர்த்தி பிடிப்போம் வள்ளலாரின்
அன்பு நெறியை
மாயட்டும் மறையட்டும்
மதவெறி
இந்த மண்ணை விட்டு 
சிலரின் மனதை விட்டு 



ஈழ தமிழரையும் இஸ்லாமியரையும்
திட்டமிட்டு புறக்கணிக்கும்
திமிர் போக்கை முறியடிப்போம் 

பிறை நிலவும் பிள்ளை தமிழும்
ஒன்றாக கைகோர்ப்போம்


Wednesday, September 26, 2018

உன் கண்களின் வெளிச்சத்தில்



மெல்லிசை மன்னர் எம் .எஸ் .வி யின் இசை வண்ணத்தில்

புதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தாவின் கவிதை நயத்தில்

“இசைத்தேன் இசைத்தேன்” தனி இசை தொகுப்பில் இடம்பெற்ற பாடல்


பாடியவர்கள் : எஸ் .பி .பி  & சித்ரா

ஆண் :           உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்

                       உன் காதலின்  தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்

 

பெண்:           உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்

                       உன் காதலின்  தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்

 

ஆண் :           அங்கம்  எங்கும் …    ஆசை முழங்கும் அரசாங்கம்

பெண்:            அங்கம்  எங்கும் …    ஆசை முழங்கும் அரசாங்கம்

 

ஆண் :           வெள்ளி நிலா  செல்லும்  உலா

                       வெள்ளி நிலா  செல்லும்  உலா   

                       உன் விரல்களின் மோதிரம் அன்பே

பெண்:           பூவணியும் தாவணியும்

                       பூவணியும் தாவணியும்

                       உன் பூமியில் ஊர்வலம் இங்கே

 

ஆண் :           அங்கம்  எங்கும்     ஆசை முழங்கும் அரசாங்கம்

பெண்:            அங்கம்  எங்கும்     ஆசை முழங்கும் அரசாங்கம்

ஆண் :           உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்

பெண்:            உன் காதலின்  தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்

 

 

ஆண் :           புத்தம்புது முத்துரதம்

                        புத்தம்புது முத்துரதம்

                       உன் புன்னகை வீதியில் ஓடும்

பெண்:           சொத்து சுகம் அத்தனையும்

                       சொத்து சுகம் அத்தனையும் 

                       உன் பத்து விரல்களை தேடும்

 

ஆண் :           அங்கம்  எங்கும்      ஆசை முழங்கும் அரசாங்கம்

பெண்:            அங்கம்  எங்கும்     ஆசை முழங்கும் அரசாங்கம்

 

ஆண் :           துள்ளி வரும் பிள்ளை தமிழ்

                                துள்ளி வரும் பிள்ளை தமிழ்

                                 உன் தோள்களில் பைங்கிளி போல

பெண்:             உள்ளம் எனும் தாமரை பூ  

                         உள்ளம் எனும் தாமரை பூ

                         உன் நியாபக அலைகளின் மேலே

ஆண் :           அங்கம்  எங்கும்    ஆசை முழங்கும் அரசாங்கம்

பெண்:            அங்கம்  எங்கும்    ஆசை முழங்கும் அரசாங்கம்

 

ஆண் & பெண் :           உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்
ஆண் & பெண்:            உன் காதலின்  தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்





 


Monday, May 21, 2018

அழகிய நிலவிது அருகினில் உலவுது



ஒரு தமிழ் பத்திரிக்கை நேர்காணலில் ,

இசை அமைப்பாளர் தேவா அவர்களிடம் உரையாடும் போது

திரைப்படப்பாடலின் அமைப்பு பற்றி பேச்சு வந்தது .

அந்த காலத்துல கண்ணதாசன் பாட்டு எழுதும் போது ,

 
மாம்பழத்து வண்டு

வாசமலர் செண்டு
யார் வரவை கண்டு

வாடியது இன்று

என்ற வரிகளை போன்று மிக சிறிய ,சிறப்பான வரிகளை எழுதினார்

 

அதே வேளையில் ,

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழிவண்ணமே

விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே.

 என்ற பல்லவியை போன்று மிக நீண்ட வரிகளையும்

எழுதுகிற கவிதை ஆற்றலும் அவர்கிட்ட இருந்தது .

இந்த காலத்துல அப்படி பட்ட பாடல்கள் உண்டா ?

 

          -இது நிருபரின் கேள்வி

கண்ணதாசன் காலத்து பாடல்களோடு இந்த காலத்து பாடல்களை  ஒப்பிட்டு பேச நான் விருப்பவில்லை என்றார் தேவா .

 என்னை பொறுத்தவரையில் இந்த விமர்சனத்தை ஒப்புக்கொள்ளும் எண்ணமில்லை .
கண்ணதாசனின் அடுத்த தலைமுறை கவிஞரான மு .மேத்தா அவர்களின் பாடலில் இருந்தே என் கருத்திற்கு வலுசேர்க்கும் எடுத்துக்காட்டை

பதிவு செய்ய முயல்கிறேன் .

 "மங்கை ஒரு கங்கை " என்ற திரைப்படம் .

இந்த படத்தில் இடம்பெற்ற காதல் (டூயட் )  பாடலான,



 அழகிய நிலவிது அருகினில் உலவுது  இளமனம் உருகுது இங்கிங்கே

பழகிய நினைவுகள் இமைகளில் விரிந்தன பறந்திட சிறகுகள் எங்கங்கே?

என்ற பாடலின் பல்லவி, கண்ணதாசனின் பாடல் போன்றே மிக நீண்ட வரிகளை கொண்டிருக்கிறது .

அதுமட்டுமல்ல.

இதுவரை திரைப்பாடலில் கண்டிராத சொல்லாட்சிகளான

நிலவிது, உலவுது, இங்கிங்கே, எங்கங்கே போன்ற

சொற்களை தன்னகத்தே கொண்ட தனி சிறப்பு வாய்ந்தது.