Translate

Friday, October 26, 2018

சுனாமி அலைகளில் - ஹைக்கூ


நூற்றி முப்பத்திமூன்று அடி திருவள்ளுவர் சிலை

சீறி எழுந்த சுனாமி அலைகளில்

இனப்படுகொலையின்  அசரீரி ஒலிகள்

 

அந்த கிராமத்தில் பௌர்ணமி நிலவொளியில்

நலம் விசாரித்து கொள்கிறார்கள்

லூர்து மாதாவும் முத்து மாரி அம்மனும்

 

அடை மழைக்கு பின் வெளி வாங்கிய வானம்

அந்த கிராமத்து  வீடொன்றில்

துக்கம் கேட்டுவிட்டு திரும்பும் அவன்

 

ஒவ்வொரு அக்டோபர் மாத மழையும்

நினைவுபடுத்துகின்றன

அம்மாவோடு தீபாவளி கொண்டாடிய நாட்களை

 

பரபரப்புக்களுக்கு நடுவே

துறவியின் மௌனம்

மாநகரின் நடுவில் ஓடும் ஆறு

 


No comments:

Post a Comment