Translate

Wednesday, July 25, 2018

கவித்துவ அழகு


மிக உயர்வான சிந்தனைகளோ, தத்துவங்களோ கவிதைக்குரிய கனத்தையோ கவனத்தையோ பெறுவதில்லை.
அதே வேளையில், மிக உயர்வான சிந்தனைகளோ, தத்துவங்களோ
மிக பெரிய மகான்களிடம் இருந்தோ, மிக பெரிய அரசியல் தலைவர்களிடம்
இருந்தோ, புறப்பட்டு வரும் பொழுது கவிதைக்குரிய கனத்தையோ கவனத்தையோ பெற்று விட்டாலும் கவித்துவ அழகு அதில் இருப்பதில்லை.
இது இவ்வாறு இருந்தபோதிலும், ஒரு கவிஞனிடம் இருந்து புறப்பட்டு வருகிற வார்த்தைகள் கவித்துவ அழகை சூடிக்கொள்கின்றன.
அந்தவகையில் ,
கவிஞர் மு.மேத்தா உள்வாங்கி கொண்ட வேறு மாமனிதர்களின் கருத்துக்கள்
கவிதை நடையில் வெளிப்படுவதை காணலாம் .
தந்தை பெரியாரின் கற்பு குறித்த நிலைப்பாட்டை மேத்தா தன் கவிதையில்,
(ஒரு பாலினத்திற்கு மட்டும் வலியுறுத்தப்படுகிற கற்பு அநீதியானது . சுயேட்சையாக அமைந்த கற்பு நெறியே சமூக நீதியானது என்றார் தந்தை பெரியார்.)


கற்பு பற்றி
யாரும் அதிகம் கதை
பேசவேண்டாம்
கற்பு உடையவர்களே இங்கே
அனைவரும்
கண்டுப்பிடிக்கப்படுகிறவரையில்”
  • (" திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் " கவிதை தொகுப்பில் இருந்து  )
 
என்று பதிவு செய்கிறார் .

மகாகவி பாரதியின் கவிதை ஆண் , பெண் என்ற இரு பாலினத்திற்கும் சொல்ல வந்த கற்பு நெறி சிந்தனையை விரிவு செய்து அரசியல் கட்சிகளுக்கும்

அதை வலியுறுத்துகிறார் .பாரதி ,  ஆண் கட்சி  மற்றும் பெண் கட்சி என்று சொல்ல வந்ததை மேத்தா அரசியல் கட்சி என்று அடுத்தகட்ட சிந்தனைக்கு கவிதையை நகர்த்துகிறார்.
இங்கே அரசியல் கட்சிகளின் கற்பு என்பது பொதுவாழ்வில் நேர்மை , அரசு நிர்வாகத்தில் தூய்மை என்ற உள்ளுறை பொருள்பட தன் கவிதையை அமைக்கிறார் மேத்தா.

அந்த கவிதை ......

கற்பு நிலை என்று சொல்லவந்தார்
அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்
என்றான் பாரதி
அதை இரண்டு கட்சிகளுக்கு மட்டுமல்ல
இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும்
பொதுவில் வைப்போம்.
  • (" திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் " கவிதை தொகுப்பில் இருந்து  )

நபிகள் நாயகம் சாந்தி மார்க்கத்தை மக்களிடம் போதித்தபோது, பழமைவாதிகளால் கடும் எதிர்ப்புக்கு உள்ளானார்.

கற்களால் கொடியவர்கள் நாயகத்தை தாக்கிய போது , இவர்களின் கைகள் நோகுமே என்று அந்த கருணை உள்ளம் கலங்கியது .
இந்த நிகழ்வு மேத்தா வின் மனதை பாதித்தது இருக்கிறது .
அந்த பாதிப்பு , அவரின் கவிதையில் அவரின் சோகமாய் கவிதை அழகோடு எட்டி பார்க்கிறது .
கவிதையுலகில் தன் நிலையை  கூறவந்த மேத்தா ,
தன்னை முன்னிறுத்தி இளைய கவிஞர்களை நோக்கி "ஒரு மௌனத்தின் மொழிபெயர்ப்பு " என்ற கவிதையில் ,

என்னை நம்பி உள்ள இளம் கிளிகள் பாவம்
எனக்குள்ளே நான் நொந்தால் அவை எங்கு போகும் ?
என்னை அடித்தவரின் கைவலிக்கு நான் மருந்து போட்டேன்
அடிபட்ட காயங்களை நான் காட்ட மாட்டேன் .

  • ( "என்னுடைய போதிமரங்கள் " கவிதை தொகுப்பில் இருந்து)
  • என்று பதிவு செய்கிறார் .




















 

No comments:

Post a Comment