Translate

Friday, July 27, 2018

ஒரு மறுப்புரை


ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலன் குறித்த வினவு தளத்தின் கட்டுரைக்கு என் மறுப்புரை.
கட்டுரையாளர், ஹீலர் பாஸ்கரின் மற்றும் பாரிசாலனின்  காணொளிகளை முழுமையாக காணவில்லை என்பது நன்றாக புலனாகிறது.
முதலாவதாக ஹீலர் பாஸ்கர் சொல்வது இயற்கை வைத்தியம் அல்ல. நம் பாரம்பரிய மருத்துவமும் அல்ல.
மருந்தில்லா மருத்துவம் என்பதே ஹீலர் பாஸ்கர் சொல்வது.
மேலும் பாரிசாலன் மருத்துவம் குறித்து அதிகம் பேசியதில்லை.
தடுப்பூசிகளின் பின் உள்ள சர்வ தேச சதி வலைப்பின்னல் குறித்து கேள்விஎழுப்பப்பட்ட போதுகூட பாரிசாலன் ,இது குறித்து தனக்கு அதிகம் தெரியாது  என்றும் ஹீலர் பாஸ்கர் தான் அதிகம் மருத்துவ உலகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். அவருக்கு தான் அதற்காக நன்றி சொல்வதாகவும் பதிவு செய்தார்.

பாரிசாலன் தமிழ் தேசீய சிந்தனையையே முன்னிறுத்துகிறவர்.
மேலும் , ஹீலர் பாஸ்கரை அவருடைய மருத்துவத்துறை விழிப்புணர்வு பணிக்காக பாராட்டிய பாரிசாலனே,
சீமான் மற்றும் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த ஹீலர் பாஸ்கரின் நிலைப்பாட்டை கடுமையாக விமரிசனம் செய்திருந்தார்.

இந்த வேளையில், இன்னொரு கருத்தையும் இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
“பதிமூன்று பேரின் ரத்த உறவுகளின் வழி வந்த சுமார் ஆறாயிரம் பேர் இந்த உலகை தங்களின் மித மிஞ்சிய பண பலத்தால் ஆட்டி படைக்கின்றனர்.
இவர்களே இல்லுமினாட்டிகள்.
இவர்களின் கட்டளையை நிறைவேற்றுபவர்கள் பிரீ மஷனரிகள்.
இந்த பெருவணிக கும்பலை அல்லது இல்லுமினாட்டிகளை கட்டுப்படுத்துவது பிரிட்டிஷ் மகாராணி.” இதுவே ஹீலர் பாஸ்கர் கூறவரும் கருத்தின் சுருக்கம்.
இதில் கட்டுரையாளர் சொல்வதுபோல் நம்பமுடியாத கட்டுக்கதை எங்கே இருக்கிறது?
ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலனின் அனைத்து கருத்துக்களுடனும் முழுமையாக நான் உடன்படவில்லை.
நான் முரண்படும் நிலைப்பாடுகளும் அவர்கள் இருவரிடமும் உண்டு.
"எதற்குமே போராடாதே அதற்கு பதில் உன்னை தடை செய்திருக்கும் அந்தசெயலை நீயே செய் . (உ –ம் ஜல்லி கட்டு போராட்டம்) என்கிறார் ஹீலர் பாஸ்கர். 
இதில் எனக்கு உடன்பாடில்லை.
அதைப்போலவே தந்தை பெரியார் குறித்த மற்றும் பெண்விடுதலை குறித்த பாரிசாலனின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லை.

          - தமிழ்மைந்தன் சரவணன்






No comments:

Post a Comment